பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

]48 لاللgلITflu|رایس سیتی بست .b ஒரு வகை அரசியலாகும். அது வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பதாகும், அல்லது அரசியல் தந்திரம் என்றும் கூறப்படும். கும்பகருணன் மிக்க வீரத்துடன் போர் புரிந்தான். அவனுடைய பயங்கரமான போரைக் கண்டு வானரப் படைகளும் பயந்து ஓடின. கும்பகருணனை எதிர்த்து அங்கதன், மாருதி, இலக்குவன், சுக்கிரீவன் ஆகியோரும் போர் புரிந்து சோர்வடைந்தனர். கடைசியில் அவனை எதிர்க்க இராமனே நேரடியாக வந்தான். கும்பகருணன், இராமனுடைய கணைகளால் தனது நாசியையும், காதுகளையும் இழந்து தனது படைகளும் அழிந்து தனியே நின்றான். எல்லாவற்றையும் இழந்து தனியே நிற்கிறாய். நீதி மானான வீடணனுடன் நீ உடன் பிறந்தவன். நீ பிழைத்துச் செல்லலாம் இல்லாவிட்டால் நீ போரில் மடிவாய் உன்னை நான் உன் தம்பி மூலம் என்னிடம் வரும்படி அழைத்தேன். நீ வரவில்லை. நீ உன் அண்ணனுடைய குருட்டுத் தனமான முரட்டுத்தனமான ஆணையின் வழியில் நின்றாய். நீ பிழைத்துப் போனால் இன்னும் நீண்ட காலம் உறங்கி, உழைத்துக் கடைசியில் மோட்ச மடைவாய் இல்லையேல் இப்போதே அழிவாய் என்று இராமன் கும்பகருணன் மீது தனது அரசியல் கணைகளை ஏவினான். “ஏதியோடு எதிர் பெரும் துணை இழந்தனை, எதிர் ஒரு தனி நின்றாய் நீதி யோனுடன் பிறந்தனை ஆகலின் நின் உயிர் நினக்கு ஈவேன் போதியோ? பின்றை வருதியோ? அன்று எனில் போர் புரிந்து இப்போதே சாதியோ? நினக்கு உறுவது சொல்லுதி, சமைவுறத் தெரிந்து அம்மா!" "இழைத்த தீவினை இற்றிலது ஆதலின் யான் உனை இளை யோனால் அழைத்த போதினும் வந்திலை அந்தகன் ஆணையின் வழி நின்றாய்