பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் - ஒரு சமுதாயப் பார்வை -அ. சீனிவாசன் 572 கம்பனுடைய கோசலத்திரு நாட்டில், “கூற்றம் இல்லை ஒர் குற்றம் இலாமையால் சீற்றம் இல்லை தம் சிந்தையின் செய்கையால் ஆற்றல் நல்லறம் அல்லது இலாமையால் ஏற்றம் அல்லது இழி தகவு இல்லையே” அந்த மக்களிடம் குற்றங்கள் நடை பெறுவதில்லை. அதனால் தண்டனைகள் என்பதும் இல்லை. மக்களிடம் தகாத கோபம் (சீற்றம்) என்பது இல்லை. நல்ல நிதானமான சிந்தனை உள்ளவர்களாக இருந்தார்கள். நல்ல நிதானமான சிந்தனையுடன் செயல் பட்டால் கோபம் ஆத்திரம் முதலிய அவசர குணங்கள் ஏற்படாது. மக்கள் நல்லறமான செய்கைகளிலேயே ஈடுபட்டார்கள். ஏற்றமுடன் மக்கள் இருந்தார்கள். ஏற்றமுடன் மக்கள் வாழ்ந்தார்கள். அவர்களிடம் இழிவான செயல்கள் எண்ணங்கள் எதுவுமே இல்லை. இன்னும், "பொற்பின் நின்றன. பொலிவு, பொய் இலா நிற்பின் நின்றன நீதி, மாதரார் அற்பின் நின்றன அறங்கள், அன்னவர் கற்பின் நின்றன கால மாரியே." நல்ல பண்புகள் நிறைந்ததாய் அழகு நிலை நின்றது என்று கம்பன் கூறுகிறார். அழகு என்பது வெறும் தோற்றத்தில் மட்டுமல்ல, அது நல்ல சிறந்த பண்புகள் நிறைந்ததாக இருக்க வேண்டும். அப்போது தான் அந்த அழகு நிலைத்து நிற்கும். இங்கு கம்பன் அழகியலுக்குத் தனி இலக்கணம் கூறுகிறார். பொய் இல்லாத நிலையில் நீதி நின்றது என்று கூறுகிறார். அதில் நீதிக்கு அடை மொழியாக பொய்யில்லா நீதி என்று அமைந்துள்ளது. நீதி என்பது வெறும் தண்ட நீதியாக இல்லாமல் குறைவற்ற நீதியாக இருக்க வேண்டும் என்பதை இங்குக் கம்பன் குறிப்பிடுவதைக் காண்கிறோம். அறங்கள் எல்லாம் மாதர்களுடைய அன்பில் நின்றன என்று கம்பன் கூறியிருப்பது மிகச் சிறப்பான கருத்தாகும். பெண்களின் அன்பு என்பது, அவர்கள் தங்களுடைய தாய் தந்தையர் பால் காட்டும்