பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&LDL60s – £9(5 &QPossills LIITsou --9. சினிவாசன் 574 அயோத்தியில் மக்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் முரசடித்தும் ஆராவாரம் செய்தும் ஆடிப்பாடியும் வாழ்கிறார்கள். அவர்களுடைய ஆரவார ஒலி, நிறைந்த சூல் கொண்ட மேகங்களின் இடி முழக்கம் போல, ஒயாது ஒசை கொடுக்கும் கடலலை போல் கேட்கும். அந்த நகரத்தில் கள்வர்கள் இல்லை. அதனால் காவல் இல்லை. கொள்வர் இல்லை அதனால் கொடுப்பார்களும் இல்லை, என்றும், அங்கு கல்வியின்மை இல்லை. எல்லோரும் நன்கு கல்வி அறிவு பெற்றவர்களாக இருந்தார்கள். அதனால் கல்வி முற்றிய வல்லவர்கள் என்பவர்கள் யாருமில்லை. அது அல்லவர்களுமில்லை. எல்லாரும் எல்லாப் பெரும் செல்வமும் எய்தியுள்ளதால் இல்லாரும் இல்லை, உடையார்களும் இல்லை என்றும் கம்பன் குறிப்பிடுவது அவருடைய சீறியடசிந்தனைடவளர்த்திற்கும் சமநிலை சமுதாய நோக்கிற்கும் தலை சிறந்த எடுத்துக் காட்டாகும். கம்பனுடைய அருமையான தலை சிறந்த பாடல்களைப் பாருங்கள். 'தெள்வார் மழையும் திரை ஆழியும் உட்க நாளும் வள்வார் முரசம் அதிர் மாநகர் வாழும் மாக்கள், கள்வார் இலாமைப் பொருள் காவலும் இல்லையாதும் கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை மாதோ !” “கல்லாது நிற்பார் பிறர் இன்மையின் கல்வி முற்ற வல்லாறும் இல்லை, அவை வல்லர் அல்லாரும் இல்லை எல்லாரும் எல்லாப் பெரும் செல்வமும் எய்த லாலே, இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லை மாதோ !” எல்லோரும் எல்லாப் பெரும் செல்வமும் எய்தலாலே இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லை என்று கூறிய கம்பன், அதற்கடுத்த பாடலில் மேலும் ஒரு படி உயர்ந்து உச்சத்திற்குச் சென்று ஒரு உயர்ந்த மேலான சமுதாய அமைப்பின் வடிவத்திலான அயோத்தியின் சமுதாயத்தை நமக்கு எடுத்துக் காட்டியுள்ளார்.