பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும் அரசியலும் 575 “ஏகம் முதற் கல்வி முளைத்தெழுந்து எண்ணில் கேள்வி ஆகும் முதல் திண்பனை போக்கி அரும் தவத்தின், சாகம் தழைத்து அன்பு அரும்பித் தருமம் மலர்ந்து போகக்கனி யொன்று பழுத்தது போலும் அன்றே! " அனைத்து வகையான அனைத்துத் துறைகளிலுமான ஒப்பில்லாத உயர்ந்த கல்வி என்னும் விதை முளைத்து, செழித்து வளர்ந்து எண்ணில்லாத அனந்தமான பல கருத்துக்களும் கேள்விகளும் தெளிவும் அறிவுமான கிளைகள் பரவி, அரும் தவமான சீரிய முயற்சிகள் என்னும் இலைகள் தழைத்து, அன்பு என்னும் மொட்டுகள் அரும்பி அவைகளில் தருமம் என்னும் மலர்கள் மலர்ந்து மணம் பரப்பி, அதில் அனைத்து செல்வங்களும் வசதிகளும் நிறைந்த வாழ்க்கை என்னும் கனி அது போகக் கனியாகப் பழுத்தது போல மக்களுடைய வாழ்க்கை நெறியும், மக்களுடைய சமுதாய வளர்ச்சியின் மேம்பட்ட நிலையும் அயோத்தியில் அமைந்திருந்தது என்று கம்பன் கூறியிருப்பது என்றென்றும் படித்துப் படித்து இன்புறத் தக்க அற்புதமான கவிதையாகும். கம்பனுடைய இந்தக் கருத்துக்களில் ஒரு முழுமையான வளர்ச்சி பெற்ற மேன்மையான சமுதாய வடிவத்தைக் காண முடிகிறது. மனிதனுடைய வாழ்க்கைக்குத் தேவையான, பயனுள்ள தீதற்ற அத்தனை வாழ்க்கைச் செல்வங்களும் கல்வியும் கல்வியில் வல்லமையும் கல்வி நிறைந்த அறிவும் நிறம்பியுள்ள காட்சியைக் கம்பன் கவிதை காட்டியுள்ளது. இக்கவிதைகள் மிகவும் சிறப்பானதும் நமது உள்ளத்தை நெகிழச் செய்வதும் நமது சிந்தனையை வளர்ப்பதுமாகும். மக்கள் அனைவரும் நல்ல சத்துள்ள சிறந்த உணவு வகைகள் கிடைக்கப் பெற்று உண்டு களித்து, திடகாத்திரமாக இருந்தனர். பழங்களும், பருப்பு வகைகளும், நெய்யும், தயிரும், தேனும் சர்க்கரையும் மற்றும் பல சேர்மானங்களும் நிறைந்த உணவு வகைகளைத்தும் தம் இல்லங்களிலிருந்து தாம் மட்டுமல்லாமல் தாமும் தமது விருந்தினரோடும் தமது சுற்றத்தாரோடும் மற்றும் அந்தணர் முதலியவரோடும் சேர்ந்து கலகலப்போடு அயோத்தி மக்கள் உண்ணும் காட்சியைக் கம்பன் மிகவும் சிறப்பாக எடுத்துக் கூறுகிறார்.