பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

здией — 90, горетили பார்வை -அ. சீனிவாசன் 576 ஏராளமான அளவில் நெல்லும் கம்பும் சோளமும் இதர நவதானியங்களும் மற்றும் பலவேறு பொருள்களும் பண்டங்களும் நிறைந்து கோசல நாடு செல்வச் சிறப்புடன் செழிப்புடன் விளங்கியதையும் கம்பன் மிகவும் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். “எள்ளும் ஏனலும், இருங்கும் சாமையும் கொள்ளும் கொள்ளையில் கொணரும் பண்டியும் அள்ளல் ஓங்கு அனத்து அமுதின் பண்டியும் தள்ளும் நீர்மையின் தலை மயங்குமே!’ “உயரும் சார் விலா உயிர்கள் செய்வினைப் பெயரும் பல் கதிப் பிறக்கும் ஆறு போல் அயிரும் தேனும் இன்பாகும் ஆயர் ஊர்த் தயிரும் வேரியும் தலை மயங்குமே!” “எறி தரும் அரியின் சும்மை எடுத்து வான் இட்ட போர்கள், குறிகொளும் போத்தில் கொல்வார் கொ ன்ற நெல் குவைகள் செய்வார் வறியவர்க்கு உதவி மிக்க விருந்துண மனையில் உய்ப்பார் நெறிகளும் புதையப் பண்டி நிறைத்து மண் நெளிய ஊர்வார்!” “முந்து முக்கனியும் நானா முதிரையும் முழு த்த நெய்யும் செந்தயிரோடு, தேன், கண்டம், முதலிய செறிந்த சோற்றில் தம்தம் இல் இருந்து தாமும் விருந்தொடும் தமரி னோடும் அந்தணர் முதலோர் உண்டி அயல் வறும் அமலைத்து எங்கும்.”