பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன்_ஒரு_சமுதாயப் பார்வை-அ-சீனிவாசன் 578 கம்பனுடைய மகாகாவியம் வெறும் கதை மட்டும் கொண்டதல்ல. திருமால் பெருமானின் பூரணரவதாரமான இராமபிரான் மனிதனாகப் பிறந்து வாழ்ந்து வாழ்க்கை நெறிகளை நிறைவேற்றிக் காட்டிய அற்புதக் களஞ்சியமாகும். அதில் அதி நுட்பமான தத்துவ இயல் கருத்துக்களும் அரசியல் பொருளியல் கருத்துக்களும், சமுதாயக் கருத்துக்களும், உயரிய தனி மனித சிந்தனைக் கருத்துக்களும், சமுதாயச் செயல்பாடுகளும் போர் முறைகளும், போர் நெறிகளும் அரசியல் தந்திரங்களும், சூழ்ச்சிகளும் பற்றிய பல சிறந்த கருத்துக்களும் நிறைந்துள்ளன. கம்பனுடைய பாத்திரப் படைப்புகள் மிக அற்புதமானவை. அவை ஒவ்வொன்றும் தனிச் சிறப்பு கொண்டவை. பாரத நாட்டு மக்களின் உள்ளங்களில் ஆழப் பதிந்துள்ள தெய்வீகப் படைப்புகளாகும். “உலகில் ஆண்டவனால் படைக்கப் பட்ட அனைத்தும் மனிதனுக்காகவே படைக்கப் பட்டவை” என்று சில ஐரோப்பிய தத்துவங்களும் மேற்கு ஆசிய தத்துவங்களும் சமயக் கருத்துக்களும் கூறுகின்றன. அதனால் உலகில் உள்ள அனைத்துப் பொருள்களையும் மனிதன் எப்படி வேண்டுமானாலும் பயன் படுத்திக் கொள்ளலாம் என்னும் நடைமுறை அங்கு தோன்றி உலகில் பரவியது. ஆனால் அதற்கு மாறாக ஆண்டவனால் படைக்கப் பட்ட மனிதன் உட்பட அனைத்துப் பொருள்களும் உயிர்களும் ஒன்றிணைந்தவை, ஒன்றையொன்று சார்ந்தவை, மனிதனுக்காக எல்லாம், எல்லாவற்றிற்குமாக மனிதன், உலகத்தின் படைப்பெல்லாம் கடவுள் மயம், உலகில் காணும் காட்சியெல்லாம், பிரமாணங்களெல்லாம் பிரத்யட்சங்களெல்லாம் கடவுள் மயமானவை. மனிதனும் அதன் ஒரு பகுதி, உலக நலனே லோக கூேடிமமே மனிதனின் உயர்ந்த லட்சியமாக இருக்க வேண்டும். எனவே உலகத்தோடு இணைந்து மனிதன் செயல் பட வேண்டும் என்னும் உயர்ந்த தத்துவத்தைக் கொண்டதாகும். அந்த உன்னத மரபுகளைத் தொடர்ந்தே, கம்பனும் அவைகளை மேலும் செழுமைப் படுத்தி தனது அரசியல் மற்றும் பொருளியல் மற்றும் சமுதாயக் கருத்துக்களையும், தத்துவ ஞானக் கருத்துக்களையும் தனி மனித சிந்தனைக் கருத்துக்களையும் எடுத்து விளக்கியுள்ளார். அவை காலத்தைக் கடந்தவை. காலத்தை வென்றவைகளாகும்