பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

зяйцей — весь заретила штором — о завѣтаей 580 போக்கி, அரும் தவத்தின் சாகம் தழைத்து அன்பு அரும்பி, தருமம் மலர்ந்து போகம் பழுத்த உன்னதமான ஒரு அரசியலை ஒரு அறநெறியிலான சமுதாயத்தைக் கம்பன் என்னும் மானுடன் மகா கவிஞன் தனது தனிப் பெரும் காவியத்தில் நமக்குப் புலப் படுத்தியுள்ளார். கம்பன் தசரதனுடைய அரசைப் பற்றியும் அரசாட்சியைப் பற்றியும் உயர்வான கருத்துக்களைக் கூறுகிறான். அயோத்தி நகரைப் பற்றி, “தங்குபேர் அருளும் தருமமும் துணையாத் தம்பகைப் புலன்கள் ஐந்து அவிக்கும் பொங்கு மாதவமும் ஞானமும் புணர்ந்தோர் யாவர்க்கும் புகலிடமான செங்கண் மால் பிறந்து ஆண்டு அளம்பருங் காலம் திருவில் வீற்றிருந்தமை தெளிந்தால் அம்கண் மாஞாலத்து இந்நகர் ஒக்கும் பொன்னகர் அமரர் நாட்டு யாதோ?” என்று கம்பன் கூறுகிறார். தசரதன் தனது நாட்டு மக்களுக்கு அன்பு செலுத்துவதில் தாயைப் போன்றவன். நலம் பயப்பதில் தவத்திற்கு ஒப்பாவான். நோய்க்கு மருந்தாவான். எல்லோருக்கும் உதவும் அறிவை ஒப்பான் என்று கம்பன் குறிப்பிடுகிறார். பொதுவாக வெள்ளமும், பறவையும், விலங்கும், வேசையர் உள்ளமும் ஒரு நிலையில் நிற்காது. ஒரு திசையில் செல்லாது என்பதை அறிவோம். ஆனால் அவையும் கூட ஒரு வழியில் ஒட நின்றவன், தசரதப் பெயர் வள்ளல் என்று கம்பன் கூறுகிறார். “தாய்ஒக்கும் அன்பில், தவம் ஒக்கும் நலம் பயப்பின் சேய் ஒக்கும் முன் நின்று ஒரு செல்கதி உய்க்கும் நீரால்