பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் - ஒரு சமுதாயப் பார்வை -அ. சீனிவாசன் 586 இவ்வாறு மிதிலை நகரத்துக் கடை வீதிகளுக்குப் பொன்னி நதியின் கரைகளை உவமையாகக் கம்பன் எடுத்துக கூறுகிறார். இராமனுக்கு முடிசூட்டுவதற்குத் தசரதன் தீர்மானித்தான். அதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்தன. ஆனால் முடிசூட்டு விழா தடை பட்டது. இராமனுக்கு நாடு இல்லை. காடு செல்ல வேண்டும் என்று முடிவாயிற்று. இலக்குவனிடம் இந்தச் செய்தியைக் கூறி இராமன் காட்டுக்குச் செல்லத் தயாராகிறான். இதைக் கேட்ட இலக்குவன் கடும் சீற்றம் கொண்டான். கோபத்துடன் இராமனுடன் வாதாடினான். இலக்குவனை சமாதானப் படுத்த இராமன் பல வாதங்களையும் எடுத்துக் கூறுகிறான். 'நன் சொற்கள் தந்தாண்டு எனை நாளும் வளர்த்த தாதை தன் சொல் கடந்து எற்கு அரசாள்வது தக்க தன்றால் என் சொல் கடந்தால் உனக்கு யாதுளது ஈனம் என்றான் தென் சொல் கடந்தான் வட சொற்கலைக்கு எல்லை தேர்ந்தான்.” என்று கம்பன் குறிப்பிடுகிறார். இதில் தென் சொல் என்பது தமிழும் வட சொல் என்பது சமஸ்கிருத மொழியுமாகும். இங்கு கம்பன் இராமனைப் பற்றி தென் சொல் கடந்தான், வட சொற்கலைக்கு எல்லை தேர்ந்தான்” என்று குறிப்பிடுகிறார். தந்தை சொல் மீறி அரசாள்வது தக்கதில்லை. தந்தை சொல்லையும் என் சொல்லையும் மீறினால் உனக்கு மதிப்பும் மரியாதையும் இல்லாமல் போய் விடும், என்று இராமன் தனது தம்பியிடம் நீதிநெறியைப் பற்றிக் கூறும்போது இராமனைப் பற்றித் தென் சொல்லிலும் வட சொல்லிலும் அதாவது தென் மொழியிலும், வட மொழியிலும் தேர்ந்தவன் என்று கம்பன் குறிப்பிடுகிறார். இராமன் தமிழ் மொழி அறிந்தவன் மட்டுமல்ல. அம்மொழியை நன்கு கற்றுக் கரை கடந்தவன். வடமொழி நூல்களையும் ஏராளமாகப்