பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

сыйusiz — «әФ, «Орёлшй штіisosu –ost_ofылғәйі 588 பரதன் அயோத்திக்குத் திரும்புகிறான். நகரத்தில் நடந்த நிகழ்ச்சிகளையும், இராமன் காட்டிற்குச் சென்று விட்டச் செய்தியையும் அறிந்தான். அதைக் கேள்வியுற்றுப் பெரும்துயரம் அடைந்து அலறினான், புலம்பினான். இராமனைத் திரும்பவும் அயோத்திக்கு அழைத்து வருவதற்குப் பரதன் தனது பரிவாரங்களுடனும் சேனைகளுடனும் இராமன் இருக்கும் காட்டிற்குப் புறப்படுகிறான். அயோத்தியின் சேனைப் பெருக்கைப் பற்றி அதைத் தமிழ்த் தலைவனுக்கு ஒப்பிட்டுக் கம்பன் கூறுகிறார். “அலைநெடும் புனல் அறக்குடித்தலால் புவி நிலைபெற நிலை நெறி நிறுத்தலால் நெடு மலையினை மண்ணுற அழுத்தலால் தமிழ்த் தலைவனை நிகழ்த்தது அத்தயங்கு தானையே.” பரதனுடன் புறப்பட்ட நிறைவான சேனை அகத்திய முனிக்கு உவமையாகக் கூறப்பட்டிருக்கிறது. இங்கு கம்பன் அகத்தியனைத் தமிழ்த் தலைவன் என்று சிறப்பாகக் குறிப்பிடுகிறார். அகத்தியன் அலைகள் நிறைந்த கடலின் (புனலின்) நீர் முழுவதையும் குடித்தான், உலகம் முழுவதையும் ஒரு நிலையில் ஒழுங்கு படுத்தி நிலை நிறுத்தினான், நெடு மலையை மண்ணாகும் படி அழுத்தினான் என்ற அவனுடைய சாதனைகளைப் பற்றி நமது கதைகள் மிகச் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன. அந்தக் குருமுனி அகத்தியர் பெருமான் தமிழைத் தந்தவன், தமிழுக்கு இலக்கணம் தந்தவன். அதனால் அகத்தியர் பெருமானைக் கம்பன் தமிழ்த் தலைவன் என்று குறிப்பிடுகிறார். அந்தத் தமிழ்த் தலைவனான அகத்தியன் கடலையும், நிலத்தையும் மலைகளையும் தனது சக்தியால் ஒழுங்ங்கு படுத்தி நிலை நிறுத்தியதைப் போல அத்தலைவனுக்கு ஒப்பாகப் பரதனுடைய பெரும் படைகளும் உலகை நெறிப்படுத்தி நிலை நிறுத்தியது என்று கம்பன் குறிப்பிடுகிறார். பரதன் தனது படை பரிவாரங்களுடன் கங்கைக் கரையை அடைந்தான். அதைக் கம்பன்,