பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உகம்பனும் அரசியலும் 483 செருத்தின் வாளினால் திறத்திறன் உங்களை அமர்த்துறைச்சிரம் கொய்து பொருத்தினால் அது பொருந்துமோ தக்கது புகன்றிலை போல் என்றான்” என்றும் கும்பகருணன் கூறுகிறான். கும்பகருணன் தொடர்ந்து வீரத்துடன் போர் புரிந்தான். இராமன் தனது கணைகளால் கும்பகருணனுடைய கரங்களைத் துண்டித்தான். பின்னர் அவன் தனது கால்களால் போரிட்டான். இராமன் அவனுடைய இரு கால்களையும் வெட்டினான். பின்னர் அவன் நெஞ்சால் தவழ்ந்து கொண்டு பற்களால் பெரும் கற்களைப் பற்றிக் கொண்டு அவைகளை ஊதி உருட்டிப் போரிட்டான். அவனுடைய இந்த பேராற்றல் மிக்க போர் ஆற்றலை இராமன் பக்கமி ருந்த அனைவரும் வியந்து பாராட்டினர். பின்னர் அவனும் சோர்வடைந்தான். காதுகள், மூக்கு, கைகள், கால்கள் ஆகியவைகளை இழந்த கும்பகருணன் இராமனை நோக்கி, “என்னுடைய வினை தீர்ந்தது. எனது தம்பி நல்லவன். உன்னை அடைக்கலம் அடைந்துள்ளான். அவன் நீதியால் வந்த பெரு நெறியில்லாமல் சாதியால் வந்த சிறு நெறி அறியான். நீயோ அரசன் வடிவில் வந்துள்ள வேதியன். எனது அண்ணன் அவனைக் கண்டால் அவன் மீதுள்ள கோபத்தால் அவனைக் கொன்று விடுவான். எனவே உனது தம்பியையும் உன்னையும், அனுமனையும் என் தம்பி பிரியாமல் இருக்க அருள் புரிவாயாக’ என்று கேட்டு வேண்டுகோள் விடுக்கிறான். “இலங்கையைப் பற்றிய இரகசியங்களையெல்லாம், இலங்கையின் வீரர்களைப் பற்றிய விவரங்களையெல்லாம் அவர்களுடைய பலம், பலவீனம், சாகசத்திறன், ஆயுதங்கள், ஆயுதப் பயிற்சிகள் முதலியவைகளைப் பற்றியெல்லாம் வீடணன் இராமனுக்கு விவரமாகச் சொல்லியிருப்பதால்தான் இராமனுக்கு இத்தனை வெற்றிகளும் கிடைக்கிறது என்பதை இராவணன் நன்கு அறிந்துள்ளான். அதனால் இராவணனுக்கு வி னனைக் காணும் போது கடுங்கோபம் வரும். தனது அரசியல் துரோகியைக் கொல்லாமல் விட மாட்டான். எதிரில் பட்டால் நிச்சயம் அவனுக்கு