பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கம்பனும் தமிழும் 591 பெருமானுக்குத் தமிழைத் தந்தான். தமிழ் மொழியைப் படைத்தவன் சிவன். அதனால் தமிழ் தெய்வத்தமிழ் என்ற பெயர் பெற்றது. சிவன் தென்னாடுடைய சிவன் என்ற பெயர் பெற்றார். அத்தகைய சிவபெருமான் தமிழை உருவாக்கி, அத்தமிழை அவன் அகத்தியனுக்குச் சொல்லிக் கொடுத்து, அவ்வகத்தியன் அத் தமிழுக்கு இலக்கணம் வகுத்து வளர்த்தான் என்றும் நமது கதைகள் குறிப்பிடுகின்றன. இனி, அவ்வகத்தியன் பெருமை அத்துடன் மட்டுமில்லை, அம்மாமுனி, நான்கு வேதங்களையும் வருந்திக் கற்றவன். நுட்பமாகக் கற்றவன். வேதங்கள் வேதமொழியில் உள்ளன. வேதங்கள் நான்கு . அவைகளை அகத்தியன் மிகவும் கவனமாகக் கற்றுத் தெளிந்தவன். அதனால் அறிவில் வளர்ச்சி பெற்று உயர்ந்தவன். அத்துடன் உலக வாழக்கையை நன்கு அறிந்து அனுபவம் பெற்றவன். மரபு வழியில் கவிபாடும் திறன் கொண்டவன். அப்படிப்பட்ட குறுமுனி அகத்தியருக்குச் சிவபெருமான் சிறந்த தமிழ் மொழியைக் கற்றுக் கொடுத்தான் என்று கம்பன் குறிப்பிடுகிறார். இங்கு கம்பன் சாத்திர அறிவையும், நடைமுறை/செயல் பாடுகளின் மூலம் வளர்ந்துள்ள உலக மக்களின் அனுபவ அறிவையும் நாட்டின் உன்னதமாத் மரபுகளின் வழியில் வளர்ந்துள்ள சிறப்பான அறிவுத் திறன்களையும், கவிபாடும் தனித்திறன்களையும் இணைக்கிறார். இவ்வாறாகக் கம்பன் அறிவு, அனுபவம், திறன், மரபு ஆகியவற்றை ஒன்றிணைத்து ஒரு முகப்படுத்தும் காட்சியைப் பல இடங்களிலும் தனது காவியத்தில் காட்டுகிறார். கம்பனுடைய இந்தக் கருத்துக்கள், அறிவின் தத்துவத்தின் உயர்ந்த வளர்ச்சி நிலையாகும். அகத்தியன் இராமனைக் கண்டவுடன் மகிழ்ச்சியினால் ஆனந்தக் கண்ணிர் பொங்கினான். இங்கு அகத்தியனின் பெருமையைப் பற்றிக் கூறும் போது அவர் தனது கமண்டலத்தின் மூலம் காவிரியைக் கொண்டு வந்தவர் என்று கம்பன் குறிப்பிடுகிறார். காவிரி தெய்வத் திரு நதியாகும். எண் திசையும் ஏழு உலகங்களும் இவ்வுலகங்களில் உள்ள உயிர்கள் அனைத்தும் வாழ்வதற்காக அகத்தியன் தனது கமண்டலத்தின் மூலம் காவிரியைக் கொண்டு வந்தான் என்று காவிரியின் சிறப்பையும் தமிழ் வளர்த்த குறு முனியின் சிறப்பையும் இணைத்துக் கம்பன் மிகவும் சிறப்பாகத் தனது கவிதைகளில் குறிப்பிடுகிறார்.