பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் - ஒரு சமுதாயப் பார்வை -அ. சீனிவாசன் 594 அருந்ததி மலையைப் பற்றிக் கூறும் போது, “அரன், அதிகன், உலகளந்த அரி அதிகன் என்றுரைக்கும் அறிவிலோர்க்குப் பரகதி சென்று அடை வரிய பரிசே போல் புகல் அரிய பண்பிற்று ஆமால்” “கர நதியின் அயலது, வால் தோய்க் குடுமிச் சுடர்த் தொகைய தொழு தோர்க் கெல்லாம், வரன் அதிகம் தரும் தகைய, அருந்ததி ஆம் நெடுமலையை வணங்கி அப்பால்” செல்லுங்கள் என்று சுக்கிரீவன் கூறுகிறான். இப்பாடல் மூலம் அரன் அதிகம், அரிஅதிகம் என்று வழக்காடும் சமய வேறுபாட்டைக் கம்பன் கண்டிக்கிறார். அடுத்து நீங்கள் இன்னும் தெற்கே செல்லும் போது திருவேங்கட மலையைக் காண்பீர்கள் என அம்மலையின் பெருமையினைக் கம்பன் மிகச் சிறப்பாகக் கூறுகிறார். “வட சொற்கும் தென் சொற்கும் வரம்பாகி நான் மறையும் மற்றை நூலும் இடைசொற்ற பொருட் கெல்லாம் எல்லையாய் நல்லறிவுக்கு ஈறாய், வேறு -புடை சுற்றும் துணையின்றிப் புகழ் பொதிந்த மெய்யே போல் பூத்து நின்ற உடை சுற்றும் தண் சாரல் ஓங்கிய வேங் கடத்தில் சென்று உறுதிர் மாதோ' என்று நெஞ்சை அள்ளும் ஒரு அருமையான கவிதை நமக்கு முன் வருகிறது. திருவேங்கட மலையை வடசொல்லுக்கும் தென் சொல்லுக்கும் எல்லையாகக் கம்பர் குறிப்பிடுகிறார். நான்மறைகள், மற்றும் இதர சாத்திர நூல்கள், இவைகளுக்கிடையில் கூறப் பட்டிருக்கும் அறிவுச் செல்வங்கள் அனைத்திற்கும் எல்லையாக புகழ் பொதிந்த மெய்யே