பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கம்பனும் தமிழும் 597 கன்று வளர் தடம் சாரல் மயேந்திர மா நெடுவரையும் கடலும் கண்டீர்” என்று கம்பன் கவிதை பேசுகிறது. தென் தமிழ் நாட்டில் உள்ள பொதிகை மலையில் அகத்தியன் தமிழ்ச் சங்கம் வைத்து தமிழ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அங்கு நீங்கள் போனால் தமிழின் இனிமையைக் கேட்டு, அகத்தியனுடைய தமிழ் சங்கத்தின் தமிழைக் கேட்டு, இன்புற்று, அந்த இனிமையில் மயங்கி அங்கேயே தங்கி விடுவீர்கள். சீதையைத் தேடும் பணியை மறந்து விடுவீர்கள். எனவே அப்பொதிகை மலையை நோக்கி ஒரு வணக்கம் செலுத்தி விட்டு அதைக் கடந்து பொன்னும் புனலும் பெருகி ஒடும் பொருனைத் திரு நதியை அடைந்து அதைக் கடந்து மகேந்திர மலையையும் கடலையும் சேரலாம் என்று வழி காட்டிச் சுக்கிரீவன் கூறுவதைக் கம்பன் சிறப்பாக தமிழின் இனிமையை வளத்தைப் பெருமையைக் கம்பன் உச்சத்திற்குக் கொண்டு செல்கிறார். சுக்கிரீவன் வழி காட்டியபடி அனுமன் தலைமையிலான வானர வீரர்கள் சீதையைத் தேடித் தென்திசையில் செல்கிறார்கள். இதைத் "தமிழுடைத் தென்திசை” என்று கம்பன் குறிப்பிடுகிறார். தென்திசையில் சென்றுள்ளவர்களின் செயல் திறனை எடுத்துக் கூறுவோம் என்பதற்கு “வண்தமிழுடைத் தென்திசைச் சென்றுளார் திறன் எடுத்து உரை செய்வோம்” என்று கவிஞர் கூறுகிறார். "குன்றிசைத்தன வெனக்குலவு தோள் வலியினார் மின் திசைத்திடும் இடைக் கொடியை நாடினர் விராய் வன் திசைப் படருமாறு ஒழிய வண் தமிழ் உடைத் தென்திசைச் சென்றுளார் திறன் எடுத்து உரை செய்வாம்” என்று கவிதை குறிப்பிடுகிறது. தென்திசையில் சென்ற மாருதியும் மற்றவர்களும் ஒரு பாதாள நகரை அடைகின்றனர். அந்த நகரின் சிறப்பை வெகு விரிவாகக் கூற வந்த கம்பன் அங்கு ஏராளமான பொன்னும் ஆடைகளும் ஆபரணக் குவியல்களும் அளவில்லாமல் இருந்த வீடுகள் இருந்தன