பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் - ஒரு சமுதாயப் பார்வை -அ. சீனிவாசன் 598 என்று கூறுகிறார். அந்த வீடுகள் எப்படிப்பட்டவை? “புவி புகழ் சென்னி பேர் அபயன் தோள் புகழ் கவிகள் தன் மனைகள்” போன்றவை என உவமை கூறுகிறார். அபய குலோத்துங்க சோழனுடைய கவிஞர்களின் வீடுகள் அவ்வளவு செல்வம் கொழித்தன என்று உவமையாகக் கம்பன் எடுத்துக் கூறுவது அவனுடைய நாட்டுப் பற்றைக் காட்டுகிறது. இன்னும் அந்தப் பாதாள நகரில் அமிழ்தம் போன்ற சோறு நிறைந்த உணவுப் பொருள்களும் தேன், கள், கனிகள் முதலியனவும் கணக்கற்ற அளவில் குவிந்து கிடந்தன என்று குறிப்பிடும் போது தமிழைப் போன்ற சுவையுள்ள தேன் என்று கவிஞர் பெருமான் குறிப்பிடுவது நேர்த்தி மிக்கதாகும். “அமிழ்துறழ் அயினியை அடுத்த உண்டியும் தமிழ் நிகர் நறவமும் தனித் தண் தேறலும் இமிழ் கணிப் பிறக்கமும் பிறவும் இன்னன கமழ்வுறத் தோன்றிய கணக்கில் கோட்பது” என்பது கம்பன் கவிதையாகும். சுக்கிரீவன் குறிப்பிட்ட படி மாருதியும் அவருடன் சென்ற இதர வாணர வீரர்களும் தொண்டை மண்டலம், சோழநாடு, தென் தமிழ்நாடு வழியாகச் செல்வதையும், வழியில் அவர்கள் கண்ட அந்த நாடுகளின் சிறப்பையும் கம்பன் கூறுகிறார். தொண்டை நல் நாட்டைப் பற்றிக் கம்ப நாடர் குறிப்பிடும் போது, “செல்வர் என்றும் வடகலை தென் தமிழ்ச் சொல் வரம் பினர் என்னும் சுமடரைக் கொல்வர் என்றும் கொடுப்பனர் என்றும் அவ் இல்வரம் பினர்க்கு ஈதேனும் ஈட்டதே?” என்று கூறுகிறார். தொண்டை நாட்டில் வடமொழி தென் மொழி ஆகிய இரண்டிலும் வல்லவர்கள் நிறைந்திருந்தனர் எனக் கம்பன் குறிப்பிடுகிறார். அடுத்து சோழ நாட்டின் சிறப்பைக் கூறுகிறார்,