பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

«ыйшейr — «РФ «Qрғытшй шптіъюви – з). «Ғбаһитеғайт 600 புகழ் ஓங்கி நிற்கும். அந்த நாட்டிற்கு ஈடு இணையேயில்லை. தேவலோகம் கூட அதற்கு ஈடாகாது. அதைக் காட்டிலும் சிறந்த நாடு என்று கூறலாம் என்று கம்பன் கூறுவது அவருடைய தமிழ் பற்றை உச்சத்திற்குக் கொண்டு செல்வதைக் காண்கிறோம். சீதை அசோக வனத்தில் சிறை வைக்கப் பட்டிருக்கிறாள். அனுமன் சீதையைத் தேடி அவள் இருக்குமிடத்தைக் கண்டு விட்டான். மரத்தின் மீது அமர்ந்து சீதையின் நிலைமையைக் கவனித்துக் கொண்டிருந்தான். அப்போது இராவணன் அங்கு வந்து சீதையைத் தனது விருப்பத்திற்கு இணங்குமாறு கூறிக் கொண்டிருந்தான். சீதை சீற்றம் கொண்டு அவனுக்குத் தக்க பதில் அளித்தாள். "தென் தமிழ் உரைத்தோன் முன்னாத் தீது (திர் முனிவர் யாரும் - புன் தொழில் அரக்கர்க்கு ஆற்றேம்! நோற் இலெம் புகுந்த போதே கொன்று அருள்! நின்னால் அன்னார் (குறைவது சரதம் கோவே என்றனர், யானே கேட்டேன், நீ அதற்கு அயைவன சய்காய்.” (இ செய்தாய் என்று சீதை இராவணனைக் கடிந்து பேசியதைக் கம்பன் குறிப்பிடுகிறார். தென் தமிழுக்கு இலக்கணம் படைத்த அகத்தியன் முன்பு கூறினான். “அரக்கர் தொல்லை அதிகரித்து விட்டது. அவர்களைக் கொன்றொழித்துத் தீதில்லாத முனிவர்களைக் காப்பாற்ற வேண்டும் எனக் கூறினான். உன்னையும் கொன்று அதன் மூலம் அரக்கர் எண்ணிக்கையும் குறையப் போகிறது” என்று கூறுகிறாள். இங்கு தென்தமிழ் உரைத்தோன் கூறியதையும் கவனமான நினைவுடன் கூறுகிறாள். சேதுவைக் கட்டி வானரப்படைச் சேது வழியாகக் கடலைக் கடந்து சென்றதைப் பற்றிக் கூறும் போது கம்பன், அப்படையைக் காவிரியின் பெருக்கிற்கு ஒப்பிட்டுக் கூறுகிறார்.