பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கம்பனும் தமிழும் 603 கண்டான். ஆச்சரியப் பட்டான். வானரப்படையின் ஆரவாரங்களை இராவணன் கேட்ட செய்திகளைக் கூறும் பாடல்களில் ஒன்று, “குமுழி நீரோடும் சோரிக் கனலொடும் கொழிக் கும் கண்ணான், தமிழ்நெறி வழக்கம் அன்ன தனிச்சிலை வழங்கச் சாய்ந்தார் அமிழ்பெரும் குறுதி வெள்ளம் ஆற்றுவாய் முகத்தில் தேக்கி உமிழ்வதே ஒக்கும் வேலை ஒதம் வந்து உடற்றக் கண்டான்.” என்று வில்லிலிருந்து இடைவிடாத அம்பு மழை பொழிவதை, அதாவது வற்றாத அம்புப் பெருக்கிற்கு அழியாத தமிழ் மரபை உவமையாகக் கம்பன் கூறுகிறார். இராமன் போர்க்களத்தில் இராவணனைக் கொன்று போர் முடித்து, வீடணனுக்கு முடிசூட்டிவிட்டு, சீதையை அழைத்துக் கொண்டு, விமானத்தில் அயோத்திக்குத் திரும்பும் போது பிராட்டிக்கு சேதுவையும், தமிழ் முனிவன் வைகும் இயல் தரு குன்றத்தையும் காவிரி முதலிய இதர நதிகளையும் காண்பித்துக் கொண்டு சென்றான். இதில் தமிழ் முனி உறையும் பொதிகை மலையைக் காட்டியதைக் கம்பன் குறிப்பிட்டுக் கூறுவது சிறப்பாகும். - சேதுவைக் காட்டி அதன் பெருமையை இராமன், சீதைக்குக் கூறுகிறான். “மற்று இதன் துய்மை எண்ணின் மலர் அயன் தனக்கும் எட்டா பொற்றொடிக் தெரிவை யான் என் புகலுகேன் கேட்டி அன்பால் பெற்ற தாய் தந்தையோடு, தேசிகர்ப் பிழை த்துச் சூழ்ந்த சுற்றமும் கெடுத்து ளோரும் எதிர்தரின் சுரர்கள் ஆவார்."