பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

сыйusiz — «PG5 «Qрятшй шптіsosv_–o. சீனிவாசன் 604 இந்தச் சேதுவைக் காண்பவர்கள் தாய் தந்தை குரு சுற்றம் முதலியோருக்குத் தீங்கு செய்திருந்தாலும் பாவம் நீங்கிப் புண்ணியம் பெறுவர் என்று கூறுகிறான். இன்னும் சேதுவின் பெருமையை மேலும் கூறுகிறான். கங்கை, யமுனை, கோதாவரி, நருமதை, காவேரி முதலிய தெய்வத்திரு நதிகளிலெல்லாம் நீராடினாலும் போகாத பாவங்களும் கூட சேதுவில் நீராடினால் போகும் என்றும் இராமன் சீதையிடம் கூறுகிறான். "கங்கையே, யமுனை, கோதாவரி, நருமதை, காவேரி, பொங்கு நீர் நதிகள் யாவும் படிந்து அலால் புன்மை போகா சங்கு எறி தரங்க வேலை தட்ட இச்சேது என்னும், இங்கிதின் எதிர்ந்தோர் புன்மையாவும் நீக்கும் அன்றே !” என்று இராமன் கூறுகிறான். அத்தகைய புண்ணியமான புனிதமான சேது தீர்த்தம் தமிழகத்தில் உள்ளது என்பதையும் அதன் பெருமையையும் கம்பன் காவியத்தின் மூலம் அறிகிறோம். அடுத்து தமிழ் முனிவன் வாழும் மலையையும் திருவேங்கட மலையையும் அனுமன் வாழ்ந்த மலையையும் காண்பிக்கிறான். “இது தமிழ் முனிவன் வைகும் இயல் தரு குன்றம் முன் தோன்று உது வளர் மணிமால் ஓங்கல் உப்புறத்து உயர்ந்து தோன்றும் அது திகழ் அனந்த வேற்பு என்று அருள்தர அனுமன் தோன்றிற்று எது என அணங்கை நோக்கி இற்று என இராமன் சொன்னான்.”