பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் : ஒரு சமுதாயப் பார்வை நூலாசிரியர் : அ.சீனிவாசன் நூலாசிரியரைப்பற்றி இந்நூலாசிரியர் திரு. அ. சீனிவாசன், முன்னாள் இராமநாதபுரம் மாவட்டம், இன்றைய விருதுநகர் மாவட்டம், ரீவில்லிபுத்துர் வட்டம், வத்ராப் ஒன்றியம், மகாராஜபுரம் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் 1925 -ம் ஆண்டில் பிறந்தவர். தனது சொந்த கிராமத்திலும், மற்றும் சாத்துர், வத்ராப், விருதுநகர், மதுரை முதலிய இடங்களில் தனது கல்வியை முடித்து இரண்டாவது உலகப் போர் காலத்தில் 1943 - ம் ஆண்டில் இந்திய விமானப்படையில் சேர்ந்து தொழில் நுட்ப நிபுணராகப் படித்துப் பட்டம் பெற்றுப் பணியாற்றியவர். சிறுவயது முதலேஇ இந்திய தேசிய விடுதலை இயக்கம், தொழிலாளர் இயக்கம், சமூக சீர்திருத்த இயக்கம், பகுத்தறிவு இயக்கம், பொதுவுடமை இயக்கம் ஆகியவற்றில் தொடர்பும் ஈடுபாடும் கொண்டு நாட்டுப்பற்றுடன் பணியாற்றியவர். 1940 -ம் ஆண்டில் யுத்த எதிர்ப்புக் கிளச்சியிலும், 1942 - ம் ஆண்டு ஆகஸ்டு போராட்டத்திலும், பொதுவுடமைக் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலத்திலும், பல தொழிலாளர், விவசாயிகளின் போராட்டங்களிலும் கைது செய்யப்பட்டு சிறைவாசமும் சித்திரவதையும் அனுபவித்து தியாகத் தழும்புகள் கொண்டவர். இராஜபாளையம் தளவாய்புரம், சிவகாசி, விருதுநகர், சாத்துர், அருப்புக்கோட்டை, சென்னை துறைமுகம், ஆவடி டாங்க் தொழிற்சாலை, கல்பாக்கம் அணுமின் நிலையம் முதலிய இடங்களில் தொழிற்கங்கத் தலைவராகப் பணியாற்றியவர். இராஜபாளையம் நகரசபை உறுப்பினராகவும், சென்னை கப்பல் கூடத் தொழிலாளர் வாரிய உறுப்பினராகவும் பணியாற்றியவர். 1984 மற்றும் 1991 - ம் ஆண்டில் அவர் நாடாளுமன்றத் தேர்தலில் சிவகாசி