பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ --ச படத்தது ஒரு விளக்கவுரை’ சிலப்பதிகாரத்தில் வைதீக் கருத்துக்கள் என்னும் நூல்களையும் எழுதி புதிப்பித்து வெளியிட்டுள்ளார். இந்த நூல்களைப்பற்றிப் பத்திரிகைகளிலும் மதிப்புரை வந்துள்ளது. இவை தவிர "ஆழ்வார்களும் பாரதியும்”, “சிலப்பதிகாரமும் நாலாயிரத் திவ்யப்பிர பந்தமும்”, “பெளத்தம்-ஒரு புதிய பார்வை' என்னும் நூல்களும் எழுதி முடிக்கப்பட்டு அச்சுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. "கம்பன் - ஒரு சமுதாயப் பார்வை” என்னும் இந்த நூல் உங்கள் கையில் இருக்கிறது. மேலும், பாரதி, கம்பன் பற்றிய புதிய ஆய்வுகளும் செய்து வருகிறார். திரு. அ. சீனிவாசன் அண்மையில் 'மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட “பாரதியின் உரைநடை பற்றிய இலக்கிய ஆய்வில் பாரதியின் உரைநடை - மொழி என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரைக்கு முதல் பரிசும் பாராட்டுப் பத்திரமும் கிடைத்துள்ளது. இவர் அண்மையில் எழுதி வெளியிட்டுள்ள “பாரதப் பண்பாட்டு தளத்தில் பாரதி என்னும் நூலுக்கு அமரர் கே.ஆர் வாசுதேவன் நினைவு இலக்கியப் போட்டியின் பரிசும் சான்றிதழும் கிடைத்துள்ளது. திரு. அ. சீனிவாசன் இப்போது பாரதீய ஜனதாக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு, அதன் தமிழ் மாநில செயற்குழு பொருப்பிலும், ஒரே நாடு பத்திரிகையில் ஆசிரியர் குழு உறுப்பினர் பொறுப்பிலும் இருந்து பாரத அன்னையின் திருப்பணியில் ஈடுபட்டு பணியாற்றி வருகிறார். அரசியல், பொருளாராம், தத்துவ ஞானம், மற்றும் பாரதி, கம்பன் தமிழ் இலக்கியம் தொடர்பான மேலும் சில நூல்கள் எழுதுவதற்கும் திட்டமிட்டுள்ளார். எழுதிக் கொண்டுமிருக்கிறார்.