பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும் அரசியலும் 485 முகத்தை மற்றவர்கள் காணா வண்ணம் தனது கழுத்தை நீக்கித் தலையைக் கடலுக்குள் போக்குவாய்” என்றும் அவனை வேண்டிக் கொண்டான். “மூக்கிலா முகம் என்று முனிவர்களும் அமரர்களும் நோக்குவார் நோக்காமை நுன் கணையால் என் கழுத்தை, நீக்குவாய், நீக்கிய பின் நெடும் தலையை கரும் கடலுள் போக்குவாய், இது நின்னை வேண்டுகின்ற பொருள்” என்றான். கும்பகருணனுடைய வேண்டுகோளின் படி இராமன் தனது கணையால் கும்பகருணனுடைய தலையைக் கொய்து அதைக் கடலின் ஆழத்தில் கொண்டு போய் அழுத்தி விட்டான் என்று கம்பன் கவிதையில் அழகு படக் கூறியுள்ளார். “வரம் கொண்டான் இனி மறுத்தல் வழக்கு அன்று என்று ஒரு வாளி உரம் கொண்ட தடம் சிலையின் உயர் நெடு நாண் உள் கொளுவாச் சிரம் கொண்டான், கொண்டதனைத் திண் காற்றின் கடும் படையால் அரம் கொண்ட கரும் கடலின் அழுவத்துள் அழுத்தினான். ஆக என்பது அக்கவிதையாகும். இத்துடன் கும்பகருணனுடைய கதை முடிவடைகிறது. இலங்கையின் அரசியலில் மாவீரன் கும்பகருணனுடைய வரலாறு ஒரு முக்கியமான அத்தியாயமாகும். இராவணனுடன் மிகவும் நெருக்கமான பாசமும் பந்தமும் உள்ளவன். அவனிடம் மதிப்பும் மரியாதையும் கொண்டவன். தன் அண்ணனுக்காகவே உயிர் வாழ்ந்தவன். செஞ்சோற்றுக் கடன் கழித்தவன். கும்பகருணன்