பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

сыйшейт – «әQ, «Qрғышй интisos» —o- эволынчай 488 அதிகாயன்போர் கும்பகருணன் நடத்திய வீரப்போர் முடிந்த பின்னர் வல்லமை மிக்க அதிகாயன் போருக்குப் புறப்பட்டான். அதிகாயன் இராவணனுடைய மகன், இந்திரசித்தனுக்கு அடுத்தபடியாக அதிகமான அளவில் வீரமும் புகழும் வெற்றிகளும் பெற்றவன். கும்பகருணனுடைய மரணத்தினால் அதிகமான அளவில் துயரத்தில் இருந்த இராவணனுக்கு ஆறுதல் தெரிவித்து கலக்கத்தை நீக்கி இலக்குவனைக் கொன்று வருகிறேன் என்று சூழுரைத்து, துது அனுப்பி, பெரிய அளவில் ஆயுதங்களும் படைகளும் கொண்டு போருக்குப் புறப்படுகிறான். அதிகாயன் வீரத்திற்கும் சூரத்திற்கும் பெயர் போனவன். ஒருவனுடைய சூரத்தனத்தைப் பற்றிச் சிறப்பாகக் குறிப்பிடுவதற்கு அதிகாய சூரன் என்று அடைமொழியிட்டுக் கூறுவது வழக்கம். அத்தனை புகழும் வல்லமையும் மிக்க அதிகாயன் பெரும் படையுடன் வந்து வானரப்படையை மோதினான். இலக்குவனும், அனுமனும், அங்கதனும் மற்றும் பல வாணர வீரர்களும் அதிகாயனையும் அவனது படைகளையும் வென்று கொன்று வெற்றி கண்டனர். அதிகாயனைப் பற்றிய விவரங்களைக் கூறும் போது வீடணன் குறிப்பிடுகிறான். “ஒவா நெடுமாதவம் ஒன்றுடையான் தேவாகரர் ஆதியர் செய் செருவில், சாவான், இறையும் சலியா வலியான், மூவா முதல் நான் முகனார் மொழியால்”, என்றும், "கற்றான் மறை நூலொடு கண்ணுதல் பால் முற்றாதன தேவர் முரண்படைதாம் மற்று ஆரும் வழங்கவலார் இலவும் பெற்றான் நெடிது ஆண்மை பிறந்துடையான்” என்றும்,