பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும் அரசியலும் 489 'அறன் அல்லது அல்லது மாறு அறியான் மறன் அல்லது பல்பணி மற்று அணியான் திறன் அல்லது ஒர் ஆருயிரும் சிதையான் உறன் நல்லது பேர் இசை என்று உணர்வான்” என்றும் “காயத்து உயிரேவிடுகாலையினும் மாயத்தவர் கூடி மலைந்திடினும் தேயத்தவர் செய்குதல் செய்திடினும் மாயத் தொழில் செய்ய மதித்திலன் ஆல்” என்றும், அதிகாயனைப் பற்றிய பலவேறு விவரங்களையும் சூட்சுமங்களையும் நுட்பங்களையும் வீடணன் இலக்குவனுக்கு எடுத்துக் கூறுகிறான். எதிரியைப் பற்றிய நுட்பமான விவரங்கள், அவர்களுடைய பலம், பலவீனம், தந்திரங்கள், உபாயங்கள், பயிற்சி அளவு, இதுவரை நடத்தியுள்ள போர்கள், அடைந்துள்ள வெற்றிகள் வாங்கள், சாபங்கள், முதலிய விவரங்கள் கிடைக்கும்போது அவர்களை அறிந்து வெல்வது சுலபமாகிறது. அதில் அரக்கர்களுடைய போர்முறைகளைப் பற்றி அறிவதில் வீடணன், இராம இலக்குவர்களுக்குப் பெரிதும் உதவுகிறான். அதிகாயனுடன் எதிர்த்துப் போரிடவிருக்கும் இலக்குவனுடைய வீரம் ஆற்றல் பற்றியும் இராமன் வாய்மொழியாகக் கம்பன் மிகவும் சிறப்பாக விவரித்துக் கூறுகிறார் இந்தப் பரிமாற்றங்கள் போர் முறைகளின் பகுதியாகும். "தெய்வப் படையும் சினமும் திறனும் மையற்று ஒழி மாதவம் மற்றம் எலாம் எய்தற்கு உளவோ? இவன் இச்சிலையில் கைவைப்பு அளவே இறல் காணுதியால்" என்றும், “என் தேவியை வஞ்சனை செய்த எழுவான் அன்றே முடிவான் இவன் அன்னவள் சொல்