பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

二“”_空g少_空g空”“_・”_二三_” 490) குன்றேன் என ஏகிய கொள்கையினால் நின்றான் உளன் ஆகி நெடுந்தகையாய்” என்றும், "கொல்வானும் இவன், கொடியோரை எலாம் வெல்வானும் இவன் அடல்விண்டுஎன ஒவ்வானும் இவன் உடனே ஒரு நீ செல்வாய் என ஏவுதல் செய்தனன் ஆல்” என்றெல்லாம் இராமன் கூறுகிறான். அதிகாயன் போருக்குப் புறப்படும்போது இலக்குவனுக்கு துது அனுப்புகிறான். உன்னுடன் எதிர்த்துப் போரிட்டு உன்னைக் கொல்ல வருகிறேன், என்று தூது அனுப்பிகிறான். இவ்வாறு தூது அனுப்பி சவால்விட்டுச் சூளுரைத்துப் போர் நடத்துவது அக்காலப்போர் மரபும் போர் உபாயமுமாகும். அப்போதுதான் வீடணன், அதிகாயனைப் பற்றிய விவரங்களைக் கூறுகிறான். எதிரியின் பலத்தைப் புரிந்து கொண்டு அதேசமயத்தில் அவ்வெதிரியை வெற்றிகொள்ளும் வகையில் தன் பக்கத்திலுள்ள வீரனின் பலத்தையும் விவரித்துத் தன் படைகளை ஊக்குவிப்பதும் போர்முறைகளில் கையாளும் உத்தியாகும். அந்த வகையில் இராமனும், இலக்குவனுடைய வீரத்தையும் வில்லாற்றலையும் போர் அனுபவங்களையும் எடுத்துக் கூறி, அவன் இராவணனையே கூட வெல்லக் கூடியவன், இந்த அதிகாயன் எம்மாத்திரம் என்று கூறி வானரப்படைத் தலைவர்களை உற்சாக மூட்டி, தன் படைகளுக்கு ஊக்கமூட்டுகிறான். அத்துடன் இராமன், அவ்வப்போது இலக்குவனுக்கு சில முக்கிய ஆலோசனைகளையும் தற்காப்பு, தாக்குதல் பற்றிய குறிப்புகளையும் கொடுத்து அவனைப் பக்குவப்படுத்துவதையும் தயார் நிலைப்படுத்துவதையும் காண்கிறோம். இலக்குவன் இராமனை வணங்கி அதிகாயனை எதிர்க்கப் போர்க்களம் புகுந்தான். இலக்குவன் அதிகாயனுடன் வீரமாகப் போர் புரிந்தான். இலக்குவனுக்குத் துணையாக வீடணன் அவனுக்கருகில் இருந்தான். அதிகாயனுடைய வீரப் போரைப்பற்றிக் கம்பன் தனது அழகிய கவிதை ஒன்றில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.