பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும் அரசியலும் 49 | “அங்கதன் நெற்றி மேலும், தோளினும் ஆகத் துள்ளும், புங்கமும் தோன்றாவண்ணம் பொரு சரம் பலவும் போக்கி வெம்கனை இரண்டும் ஒன்றும் வீரன்மேல் ஏவி, மேகச் சங்கமும் ஊதி விண்ணோர் தலைபொதிர் எரிய ஆர்த்தான்.” இலக்குவன் தொடுத்த கணைகளையெல்லாம் தடுத்துப் பதில் கணைகளையும் ஏவி அதிகாயன் ஆர்ப்பளித்தான் என்று கம்பன் குறிப்பிடுகிறார். கடைசியில் இலக்குவன் தன்னிடமிருந்து மிகவும் சக்தி வாய்ந்த கணையொன்றைத் தொடுத்தான். அந்தக் கணை அதிகாயனுடைய தலையை வாங்கிக் கொண்டு ஆகாயத்தின் வழி சென்றது என்று கம்பன் குறிப்பிடுகிறார். “நன்று என உவந்து வீரன் நான்முகன் படையை வாங்கி மின்தனி திரண்டது என்னச் சரத்தொடும் கூட்டி விட்டான் குன்றினும் உயர்ந்த தோளான் தலையினை க் கொண்டு அவ்வாளி சென்றது விசும்பின் ஊடு, தேவரும் தெரியக் கண்டார்.” இலங்கையின் அரக்கர் படையும், வீரர்களும் மிக்க பல முள்ளவர்கள் தான். அவர்களுடைய ஆயுதங்களும் வலுவானவைகள் தான். ஆயினும் இராம இலக்குவனர்களிடமிருந்த ஆயுதங்கள் மிக நவீனமானதும் சக்தி மிக்கதுமாக இருந்தன. அத்து ன் இவர்களிடம் பயிற்சியும் குறித் திறனும் தற்காப்புத் திறனும், தாக்குதல் திறனும், அதிகமாக இருந்தது. அது சமுதாய வளர்ச்சியின் பாற் பட்டதாகும். மேலும் இராமனுடைய ப ைகளில் தர்மமும் நம்பிக்கையும் கூட்டு செயல் பாடுகளும் துணையாக இருந்தன. அதனால் இராமனிடம் வெற்றி அமைந்தது.