பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

сыйшейт – бәQ, «Qдаятшй шптisvov –ost_ofбойвилғайт 492 தன்மகன் அதிகாயன் போரில் மாண்டான் என்னும் செய்தியைக் கேட்டு இராவணன் மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைநதான. "ஏங்கிய விம்மல், மானம், இரங்கிய இரக்கம் வீரம் ஓங்கிய வெகுளி, துன்பம் என்று இவை ஒன்ற ற்கு ஒன்று தாங்கிய தரங்கம் ஆகக்கரையினைத் தள்ளித் தள்ளி வாங்கிய கடல்போல் நின்றான், அருவிநீர் வழங்கும் கண்ணான்” கடற்கரையில் கடல் அலைகள் ஒவ்வொன்றாய் வரிசையாய் வந்து மோதிக் கொண்டிருகின்றன. அவைகளிலிருந்து எழும் எதிர் அலைகளும் மோதிக் கொண்டேயிருக்கின்றன. அது ஒரு அரிய காட்சி, விம்மல், மானம், இரக்கம், வீரம், வெகுளி, துன்பம் ஆகிய இவையெல்லாம் அலை அலையாய் மோதல்கள், எதிர் மோதல்களாக இராவணனுடைய உள்ளத்தில் எழுந்தன. மோதின, கலங்கின என்பது கம்பன் கவிதை. இன்னும் இராவணனுடைய சிந்தனையும் கலங்கிய கண்களும் எவ்வாறு இருந்தன. = "திசையினை நோக்கும் நின்ற தேவரை நோக்கும், வந்த வசையினை நோக்கும் கொற்ற வாளி னை நோக்கும் பற்றிப் பிசையுறும் கையை, மீசை சுறுக்கொள உயிர்க்கும் பேதை நசையிடைக் கண்டான் என்ன நகும் அழும், முனியும் நானும்” இன்னும் இராவணனுடைய சிந்தனை எவ்வாறு இருந்தது,