பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

сыйшsiz — «әQ, «Qрёлшй шптіsos» —ost_osofkитчай 494 என்றவாறு புலம்பி இராவணனுடைய ஆட்சி எப்படி உள்ளது எனவும் கூறி அழுகிறாள். “உம்பி உணர்வுடையான் சொன்ன உரை கேளாய் நம்பி குலக்கிழவன் கூறும் நலம் ஒராய் கும்பகருணனையும் கொல்வித்து என் கோ மகனை அம்புக்கு இரையாக்கி ஆண்டாய் அரசு ஐயா! ” என்று கூறும் தானமாலையின் அழுகுரல் இலங்கையின் அரசியல் அவலத்தை வெளிப் படுத்துகிறது. அட்சயனும், அதிகாயனும், கும்பகருணனும் மற்றும் பல எண்ணற்ற மாவீரர்களும் மடிந்து பட்டார்கள். சீதையின் மீதான காமத்தால் இத்தனை அழிவுகளும் ஏற்பட்டன. அறிவிற் சிறந்த வீடணன் எத்தனையோ நீதி நெறிகளை எடுத்துரைத்தான். குலக் கிழவன் மாலியவான் எத்தனையோ அறிவுரைகளையும் நல்லுரைகளையும் எடுத்துக் கூறினான். எதையும் நீ கேட்கவில்லை. கும்பகருணனையும் கொல்வித்தாய். இப்போது என் கோமகனையும் அம்புக்கு இரையாக்கினாய். உன்னுடைய அரசின் ஆட்சியின் அலங்கோலம் இப்படியிருக்கிறது என்று இராவணனுடைய ஆட்சியைக் குறிப்பிட்டு தானமாலை அழுதாள். இந்திர சித்தன் * அடுத்து மேகநாதன் போருக்கு எழுந்து கடும்போர் நடத்தியதைக் கம்பனுடைய காவியம் விவரித்துக் கூறுகிறது. இந்திர சித்தன்.ஒரு மாவீரன். அவனுடைய போர்த்திறனும் சாகசங்களும் தனி வரலாறு கொண்டவை. அவன் போருக்கு எழுந்தததைக் கம்பன் “ எழிலித்தனி ஏறென, இந்திரசித்து எழுந்தான், மேகத்தின் ஒப்பற்ற இடியேற்றைப் போல இந்திரசித்தன் எழுந்தான்” என்று குறிப்பிடுகிறார். “ இன்னும் வில்லாளரை எண்ணின் வீரற்கு முன் நிற்கும் வீரன்” என்றும், "நெடிதுன்னி முனிந்து நெருப்பு உயிர்ப்பான்” என்றும் கம்பன் சிறப்பித்துக் குறிப்பிடுகிறார். போருக்கெழுந்துப் பொங்கி வரும் இந்திர சித்தனை இவன் யார் என்று இலக்குவன் வீடணனைக் கேட்டான். யார் இவன் வருபவன் இயம்புவாய் ” என்று வீர வெம் தொழிலினான் வினவ,