பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

сошиэйт – «РФ ~Qрғылшй иптіsosv –әзу. costofkалғай7 496 “இருதிரைப் பெருங்கடல் இரண்டு திக்கினும் பொரு தொழில் வேட்டு எழுந்து ஆர்த்துப் பொங்கின வருவன போன்றன மனத்தினால் சினம் திருகின எதிர் எதிர் செல்லும் சேனையே’ என்றும் கற்பட, மரம்படக் காலவேல்பட விற்படு கணைபட விழும் வீரர்தம் எல்படும் உடல்பட இரண்டு சேனையும் பிற்பட நெடு நிலம்பிளந்து பேருமால் என்றும் இருகடல்களும் மோதியதைப் போல பூமியே பிளந்த போகும்படி இரு படைகளும் மோதியதாகக் கம்பன் கூறுகிறார். இந்திரசித்தன் வானரப் படைகளை எதிர்த்துக் கடும் தாக்குதல்களை நடத்தினான். அதனால் வானரப் படைக்குக் கடும் சேதம் ஏற்பட்டது. மாருதி தலையிட்டு மேகநாதனை எதிர்த்தான். மாருதியைக் கண்டதும் இந்திர சித்தன் கடும் கோபம் கொண்டு பேசினான். “நில்லடா சிறிது நில்லடா உனை நினைந்து வந்தனன் முனைக்குநான் வில் எடாமை, நினது ஆண்மைபேசி உயி ரோடுநின்று விளையாடினாய் ! கல்அடா, நெடுமரங்களோ, வரு கருத்தினேன் வலிகடப்பவோ சொல்லடா ” என இயம்பினான் இகன் அரக்கன், ஐயன் இவன் சொல்லினான் இவ்வாறு இந்திர சித்தன் மாருதியை நிறுத்தினான். வில் எடுக்காமல் வெறும் கல்லும் மரமும் எடுத்து வீரம் பேசுகிறாயா? நில்லடா, உன்னை ஒருகை பார்க்கிறேன். என்று இந்திரசித்தன் வீரம் பேச, அனுமன் மிகவும் அடக்கமாகப் பேசினான்.