பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S. suugpun .9lusiusyu. 499 கழற்றி வைத்துவிட்டு ஒய்வெடுக்க முனைந்தார்கள். அந்த நேரத்தில் எதிர்பார்க்காத முறையில் இந்திரசித்தன் ஆகாயத்திலிருந்து அரவக் கணையை ஏவினான். அந்த நாக பாசக் கணை இலக்குவனையும் இதர வானா வீரர்களையும் மயக்கி விழ்த்தியது. “விட்டனன் அரக்கன்வெய்ய படையினை விடுத்தலோடும் எட்டினோடு இரண்டுதிக்கும் இருள் திரிந்து இரிய ஒடிக் கட்டினது என்ப மன்னோ காகுத்தற்கு இளைய காளை தட்டவான் வயிரத்திண் தோள் மலைகளை உளைய வாங்கி” "இறு குறப்பிணித்தலோடும் யாவையும் எதிர்ந்த போதும், மறுகுரக்கடவான் அல்லன், மாயம் என்று உணர்வான் அல்லன், உறுகுறைத்துன்பம் இல்லான் ஒடுங்கி னான் செய்வது ஒரான் அறுகுறைக்களத்தை நோக்கும் அந்தரம் அதனை நோக்கும்.” இவ்வாறு இந்திர சித்தனுடைய நாக பாசத்தால் வானரப்படையினர் கட்டுண்டு வீழ்ந்தனர். “வெப்பாரும் பாசம் வீக்கி வெம்கணை வளை க்கும்மெய்யன் ஒப்பாரும் இல்லான் தம்பி உணர்ந்திருந்த இன்னல் உய்ப்பான் இப்பாசம் மாய்க்கும் மாயன்யான் வல்லேன் என்பது ஒர்ந்தும் அப்பாசம் வீச ஆற்றாது அழிந்த நல் அறிவு போன்றான்.