பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றவாறு இந்திரசித்தனுடை நாகக்கணை இலக்குவனைக் கட்டியது. இந்திரசித்தன் மகிழ்ச்சியடைந்தான். "சொற்றது முடித்தேன், நாளை என் உடல் சோர்வை நீக்கி மற்றது முடிப்பேன், என்னா எண்ணினன் மனிதன் வாழ்க்கை இற்றது, குரங்கின்தானை இறந்தது என்று இரண்டு பாலும் கொற்றமங்கலங்கள் ஆர்ப்ப இராவணன் கோயில்புக்கான்” "நான் சொன்னது முடித்தேன். இலக்குவனை வீழ்த்தி விட்டேன். நாளை இராமனையும் வெல்வேன். மனிதர்களின் வாழ்க்கை முடிந்தது. வானரர்களின் ஆட்சியும் அட்டகாசமும் ஒய்ந்தது”, என்று வெற்றி முழக்கங்களுடன் இந்திரசித்தன் இராவணனுடைய மாளிகைக்குத் திரும்பினான். அரவக்கணைபட்டு மயக்கமுற்றுக் கிடந்த வானரர்களையும் இலக்குவனையும் கண்டு இராமன் வருந்தினான் என்னிடம் முன் கூட்டியே சொல்லியிருக்கக் கூடாதா, கெடுத்து விட்டாயே காரியத்தை என்றுகூட வீடணனைக் கோபித்துக் கொண்டான் என்று கம்பர் குறிப்பிடுகிறார். “எடுத்தபோர் இலங்கை வேந்தன் மைந்த னோடு இளைய கோவுக்கு அடுத்தது என்று என்னை வல்லை அழைத் திலை அரவின் பாசம் தொடுத்தகை சரத்தினோடும் துணித்து உயிர்குடிக்க என்னைக் கெடுத்தனை வீடணா நீ என்றனன் கேடிலாதான். இந்திரசித்தன் மாயமாய் மறைந்திருந்து இந்தச் செய்கையைச் செய்திருக்கிறான். நாங்கள் அதை அறியவில்லை, என்று வீடணன்