பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமயன - ஒரு சமுதாயப்-பாவை-அ.-சீனிவாசன் 506 அந்த நேரத்தில் இந்திரசித்தன் இலக்குவன் மீது நான்முகன் படைக்கலத்தை ஏவினான். அந்தத் தெய்வீகப் படைக்கலம் இலக்குவனையும் வானரப்படைகரையும் சாய்த்தது. இந்திரசித்தன் வெற்றிச்சங்கை முழங்கிக்கொண்டு' தனது தந்தையின் மாளிகையை அடைந்தான். மகோதரனும் தப்பித்துக் கொண்டு இலங்கை சேர்ந்தான். "இன்னகாலையில், இலக்குவன் மேனிமேல் எய்தான் முன்னை நான்முகன் படைக்கலம் இமைப்பதன்முன்னம் பொன்னின் மால்வரைக்குரீஇ இனம் மொய்ப்பனபோலப் பன்னலாம்தரம் அல்லன சுடர்க்கணை பாய்ந்த” “வெம்கண் வானரக்குழுவொடும் இளைய வன் விளிந்தான் இங்குவந்திலன், அகன்றனன் இராமன் என்று இகழ்ந்தான் சங்கம் ஊதினன், தாதையை வல்லையில் சார்ந்தான் பொங்குபோர் இடைப்புகுந்துள பொருள் எலாம் புகன்றான்.” இவ்வாறு இந்திரசித்தன் தனது சாதனைகளைத் தனது தந்தையிடம் எடுத்துக் கூறியதைக் கம்பன் குறிப்பிடுகிறார். இராமன் இறக்கவில்லையா என்று இராவணன் கேட்டான். இராமன் களத்தில் இல்லை எங்கோ போய் மறைந்து கொண்டான் போலிருக்கிறது. தனது தம்பியையும், நண்பர்களையும் தனது சேனைகளையும் கொல்வித்துத் தான் மட்டும் மறைந்து போனான் என்று இந்திரசித்தன் இராமனைப் பற்றி ஏளனமாகக் கூறினான். “ இறந்திலன்கொல் ஆம் இராமன் ” என்று இராவணன் இசைத்தான் துறந்து நீங்கினன் அல்லனேல் தம்பியைத் தொலைத்துச்