பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பி ட ட | *2 =cott --- = < *. 5 ريتات التيՍՏ “ தமையனைக் கொன்று தம்பிக்கு வானரத் தலைமை அமைய நல்கினேன், அடங்கலும் அவிப்ப தற்கு அமைந்தேன் கமை பிடித்து நின்று உங்களை இத்துணை கண்டேன் சுமை உடற்பொறை சுமக்க வந்தனென்” எனச் சொன்னான். அங்கதனைக் கண்டு, அடைக்கலம் வந்தவனைக் கூடக் காப்பாற்ற முடியாமல் போனேன் என்று அழுதான். அருமைத் தம்பி இலக்குவனைக் கண்டு, “பொருமினான், அகம் பொங்கினான் உயிர் முற்றும் புகைந்தான் குருமணித் திருமேனியும் மனம் எனக் குலைந்தான் தருமம் நின்று தன் கண்புடைத்து அலமரச் சாய்ந்தான் உருமினால் இடி உண்டது ஒர் மராமரம் ஒத்தான்” இவ்வாறு மானிடப் பிறப்பு எடுத்த இராமன் தனது வாழ்க்கையில் நடந்த துன்பங்கள், துயரங்கள் இழப்புகளைப் பற்றியெல்லாம் நினைந்து வருந்தினான். நாட்டை இழந்ததும், தந்தையை இழந்ததும், வனத்திடை வந்ததும், கானகத்தில்பட்ட துன்பங்களும் சீதையைப் பிரிந்ததும், சடாயுவை இழந்ததும், இப்போது சுக்கிரீவனை, அங்கதனை, அனுமனை, அருமைத் தம்பி இலக்குவனை இழந்தது பற்றியெல்லாம் நினைந்து நினைந்து வருந்தி சோர்ந்து விழுந்தான். “தாங்குவார் இல்லை, தம்பியைத் தழிக் கொண்ட தடக்கை வாங்குவார் இல்லை, வாக்கினால் தெருட்டு வார் இல்லை