பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமபன - ஒரு சமுதாயப் பார்வை -அ. சீனிவாசன் D 12 படைக்கலங்கள் கிளப்பது ஒன்றும் மீண்டேயும் தம்உருவே அருளுவதோர் மெய்மருந்தும் உளநீ விர ஆண்டு ஆகிக்கொணர்தி என அடையாளத் தொடும் உரைத்தான் அறிவின்மிக்கான்” மாண்டாரை உய்வித்து உயிர் எழுப்பும் மருந்தும், காயங்களை, புண்களை ஆற்றும் மருந்தும், உடம்பும் உறுப்புகளும் வேறு வேறாகப் பிளந்து போனதைத் திரும்பவும் ஒன்று சேர்க்கும் மருந்தும், உடம்பிற்குள் ஆயுதங்கள் பதிந்திருந்தால் அவைகளை நீக்கிப் புண்களை ஆற்றும் மருந்தும் இவ்வாறாகப் பலவகை மருந்துவத் தன்மைகளைக் கொண்ட செடிகளும் இலைகளும் உள்ளன. அவைகளை அடையாளம் கூறி எடுத்து வரும்படி மாருதியிடம் சாம்பவன் சொல்லியனுப்பினான். மேருவை நோக்கி வாயு வேகத்தில் வெகுவேகமாக வடதிசையில் சென்று மலையை அடைந்தான். “இங்கு நின்று இன்னை மருந்து என்று எண்ணினால் சிங்கும் ஆல்காலம் என்று உணர்ந்த சிந்தையான், அங்கது வேரொடும் அங்கை தாங்கினான் பொங்குநல் விசும்பிடைக் கடிது போகுவான்.” மலையருகில் போய் நின்று மருந்து இலைகளைத் தேடினான். அதைக் கண்டுபிடிக்கக் காலமும்நேரமும் அதிகமாகும் என்பதால் அம்மலையையே வேரோடு எடுத்துக் கொண்டு அதிவேகமாக ஆகாய மார்க்கத்தில் பறந்து வந்தான், வந்து சேர்ந்தான். இதற்கிடையில் போர்க்களத்தில் சோர்ந்து கிடந்த இராமனை, வீடணனும், சாம்பவனும் கால்களை வருடினர். இராமன் கண் விழித்தான். இருவரையும் தன் கண்களால் பார்த்தான். அவர்களைக் கண்டு, இலக்குவனும் இதர வாணர வீரர்களும் இறந்து கிடப்பதுபற்றி மீண்டும் பலவாறு கூறிப் புலம்பினான். அப்போது சாம்பவன் இராமனைத் தேற்றி, மாருதி மருத்துவ மலையைக் கொண்டுவர வடக்கு நோக்கிச் சென்றுள்ளான். விரைவில் வந்து விடுவான்.