பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் - ஒரு சமுதாயப் பார்வை -அ. சீனிவாசன் 5|4 எழுந்தனர் என்பதைக் கம்பன் மிக நுட்பமாகப் பிரித்துக் காட்டிக் கூறியுள்ளார். “ஒங்கிய தம்பியை உயிர்வந்து உள்ளுற விங்கிய தோள்களால் தழுவி, வெம்துயர் நீங்கினன் இராமனும் உலகில் நின்றில தீங்கு உளதேவரும் மறுக்கம் தீர்ந்தனர் இலக்குவன் உயிர் பெற்றான். இராமனும் அவனைக்கட்டித் தழுவித் துயர் நீங்கினான். உலகில் தீங்குகள் என்றும் நிலைத்திருந்ததில்லை என்பதை இந்நிகழ்ச்சிகள் மூலம் அறிகிறோம். மாண்டவர்கள் உயிர்பெற்று எழுந்தபின் சஞ்சீவி மலையை அனுமன் மீண்டும் அதன் இருப்பிடத்திற்குக் கொண்டுப் போய்ச் சேர்த்து விட்டுத் திரும்பினான். 外 المه இந்தப் பகுதியில், போரின் போது,மருத்துவத்தின் முக்கியும் பற்றி இங்கு விவரித்துக் கூறப்படுகிறது. இலையைக் கொண்டு வரச்சொன்னால் மலையையே கொண்டு வரும் அனுமனைப் போன்ற நமது நாட்டு மக்களின் இயல்பை அவர்களின் சிறப்பை நினைத்து , இந்த நேரத்தில் நாம் பெருமைப்படுகிறோம். சஞ்சீவிடமலையும், மூலிகை இலைகளின் மருத்துவச் சிறப்பு/குணங்களும் அனுமனுடைய அரிய சாதனையும் நமது நாட்டு மக்களின் உள்ளங்களில் நீங்காத நினைவாக இடம் பெற்றுள்ளன. அனுமன் சஞ்சீவி மலையைத் துக்கிவருவதைப் போன்ற கலைவடிவத்தையும் படைத்துப் பெருமைப் படுகிறோம். நாமும் அதன் பெருமைகளை நினைவு கூறி அனுமனுடைய ஆற்றலை அரிய சேவையை நமது உள்ளத்தில் வைத்துப் பாராட்டுவோமாக. போர்க்களத்தில் இந்திர சித்தன் அடைந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் இராவணனுடைய மாளிகையில், ஆட்டங்கள் பாட்டங்கள் நடைபெற்றன. இசைகள் பாட்டுக்கள் முழங்கின. மதுக்களுடன் மங்கையரும் கூடி ஆடிப்பாடிக் களித்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் மீண்டும் எழுந்த வானரவீரர்களின் ஆர்ப்பொலிச்சத்தம் கேட்டது. தூதர்கள் மூலம் வானரப்படை மருத்துவ மலைமூலம் மீண்டும் உயிர் பெற்று எழுந்துள்ள செய்தியை இராவணன் அறிந்தான்.