பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும் அரசியலும் 515 மீண்டும் இராவணன் மந்திராலோசனை சஞ்சீவி மலையின் மூலிகைகள் மூலம் உயிர் பெற்று எழுந்து, வானரப்படை ஆர்ப்பளித்ததை அறிந்த இராவணன் மீண்டும் தனது-திமந்திரக் கிழவரையும் உற்றாரையும் அழைத்து அவையைக் கூட்டினான். அவைக்கு இராவணனுடைய மைர் முதலமைச்சன் மகோதரனும் இதர முக்கிய அமைச்ர்களும் முதியோர்களும் வந்திருந்தனர். “மைந்தனும், மற்றுளோரும், மகோதரப் பெயரினானும் தந்திரத் தலைமையோரும் முதியரும் தழுவத் தக்க மந்திரர் எவரும் வந்து மருங்குறப்படர்ந் தார், பட்ட அந்தரம் முழுதும் தானே அனையவர்க்கு அறியச் சொன்னான். அந்தரங்கமாக, மிகவும் நெருக்கமானவர்களை வைத்து அரசன் மந்திராலோசனை செய்வது என்பது இலங்கை அரசியலிலும், ஒரு வளர்ச்சியடைந்த செல்வ வளம்மிக்க அரசின் ஆட்சி முறைப்பழக்கமாக இருந்து வந்திருக்கிறது என்பதை இதற்கு முன்னரும் பல கட்டங்களில் கண்டிருக்கிறோம். ஆயினும் மந்திராலோசனைக் கூட்டத்தில் பலரும் கூறிய பல நல்ல ஆலோசனைகளை நிராகரித்து இராவணன் தனது தனியாண்மை நிலையிலிருந்தே முடிவுகளுக்கு வந்துள்ளான் என்பதையும் கதையில் காண்கிறோம். குறிப்பாகச் சீதையை விட்டுவிடும்படி பலர் கூறியும் இராவணன் கேட்கவில்லை. இப்போது மீண்டும் இராவணனுடைய பாட்டன் மாலியவான் தலையிட்டு அறிவுரை கூறுகிறான். மேருமலையைக் கூடக்கொண்டு வந்து மாண்டவர்களை எழுப்பிவிட்டனர். வல்லமைமிக்க அரக்கர்களெல்லாம் போரில் மடிந்து போயினர். இடிந்துபட்ட இலங்கையும் நீயும் சிறுவனும் தவிர வேறு யாருமில்லை. இனியாவது சீதையை விட்டுவிட்டு அறத்தின் மிக்கோரிடம் அடைக்கலம் அடைந்துவிடு என்று கூறுகிறான்.