பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*шиват — бәФ әсрәтили штвови --гу, збліятээй. 5|6 "இறந்தனர் இறந்து தீர இனிஒரு பிறவி வந்து பிறந்தனம் ஆகின் உள்ளோம் உய்ந்தனம் பிழைக்கும் பெற்றி மறந்தனம் எனினும் இன்னம் சனகியை மரபின் ஈந்து அவ் அறம்தரு சிந்ததையோரை அடைக் கலம் புகுதும் ஐயா” “மறிகடல் குடித்துவானம் மண்ணோடும் பறிக்க வல்ல எறிபடை அரக்கர் எல்லாம் இறந்தனர் இலங்கை ஊரும் சிறுவனும் நீயும் அல்லால் யார் உளர் ஒருவர்? தீர்ந்தார் வெறிது நம் வென்றி என்றான் மாலி மேல் விளைவது ஒர்வான்” என்று மாலியவான் அறிவுரை கூறியதைக் கம்பர் குறிப்பிடுகிறார். இதைக்கேட்ட இராவணனுக்குக் கோபம் வருகிறது. கிளியைப் போன்றவன்ை விட்டுவிடுவதற்காகவா பிடித்து வந்தேன்? உங்களுக்கு பயமாக இருந்தால் ஒடிவிடுங்கள். நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன், என்று மாலியவான் கூறிய ஆலோசனைக்கு மறுப்புக் கூறுகிறான். “கட்டுரை அதனைக்கேளா கண் எரிகதுவ நோக்கி பட்டனர் அரக்கர் என்னில் படைக்கலம் படைத்த எல்லாம் கெட்டன எனினும் வாழ்க்கை கெடாது நல்கிளி அன்னாளை விட்டிட எண்ணியோ நான் பிடித்தது வேட்கை விய” “மைந்தன் என்? மற்றையோர் என்? அஞ்சி னர் வாழ்க்கை வேட்டீர்,