பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும் அரசியலும் 5||7 உய்ந்து நீர் போவீர் நாளை ஊழி வெம் தீயின் ஓங்கிச் சிந்தினென் மனிதரோடு அக்குரங்கி னைத் தீர்ப்பென் என்றான் வெம்திறல் அரக்கர் வேந்தர் மகன் இவை விளம்பல் உற்றான்” தந்தை கூறியதைக் கேட்ட மேகநாதன் நான் ஏவிவிட்ட நான்முகன் படைக்கலம் இராமனது மேனியைத் தீண்டாமல் என்னிடம் திரும்பி வந்து விட்டது. எனவே இராமன் யார் என்று தெரியவில்லை. வீடணன் கூறியதைப் போல அவன் அனைத்தையும் கடந்தவனோ என்னவோ தெரியவில்லை. அது எப்படியாயினும் அதைப்பற்றிக் கூறுவது ஆண்மையல்ல. நான் போய் நிகும்பலையாகம் முடித்து அவர்களை வீழ்த்துவேன்” என்று தந்தைக்கு ஈடாகவே மகனும் தனியாண்மை பேசுகிறான் என்பதையும் கம்பன் மிக நன்றாகவே குறிப்பிடுகிறார். ஆயினும் இந்திரசித்தனுடைய சிந்தனையில், தனது சொந்தப்போர் அனுபவத்தின் காரணமாகச் சில மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைக் காணமுடிகிறது, தொடக்கத்தில் மனிதரையும் வானரரையும் இகழ்ந்தான். கேலி பேசினான். தேர், குதிரை, யானைப் படைகள் இல்லாதவர்கள் என்று கூறினான். வில் இல்லாமல் கல்லைக் கொண்டு போரிட்டா அவர்கள் வெற்றிபெறப் போகிறார்கள் என்று பேசினான். பிரம்மாஸ்திரத்தை ஏவியபோது இராமன் எங்கோ போய் ஒழிந்து கொண்டான்” என்றெல்லாம் பேசினான். இப்போது அவ்வந்தணன் படையும் அவனை ஒன்றும் செய்யாமல் என்னிடம் திரும்பி வந்துவிட்டது. அவன் யார் என்று தெரியவில்லை. அவன் வீடணன் கூறியதைப் போல அனைத்தையும் கடந்தவனோ என்று பேசுகிறான். "உனதுநான் உணர்த்தல்பாலது உணர்ந் தனை கோடல் உண்டேல் தளமலர்க்கிழவன் தந்த படைக்கலம் தழலின் சாற்றி