பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும் அரசியலும் 521 பலமடங்கு பெருகிவிடும். அவர்களை யாராலும் வெல்ல முடியாத வல்லமையைப் பெற்றுவிடுவார்கள். எனவே அந்த வேள்வியைச் செய்யவிடாமல் சிதைத்துவிட வேண்டும். அதற்கு அனுமதி அளித்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்வாயாக’, என்று கூறுகிறான். இராமனும் அந்த வேள்வியைச் சிதைக்க அனுமதி கொடுத்தான். இலக்குவனை அழைத்து, வாழ்த்துக் கூறிப் பலவகைப் படைக்கலன்களையும், கவசங்களையும், தற்காப்பு மற்றும் தாக்குதல்களுக்கான ஆலோசனைகளையும் கூறுகிறான். இருதடவைகளில் இராமன் அருகில் இல்லாத போது இந்திரசித்தனுடைய தாக்குதல்களினால் இலக்குவன் ஆபத்துக்குள்ளானான். எனவே அந்த அனுபவங்களையும் எடுத்துக் கொண்ட, இலக்குவன் போதுமான தற்காப்புடனும், உஷார்த் தன்மையுடனும் இருக்க வேண்டிய அவசியத்தை இராமன் உணர்நதிருந்தான். எனவே அதற்கான உத்திகள், கவசங்கள், ஆயுதங்கள், அஸ்திரங்கள் பற்றிய விவரங்கள், அவைகளைச் சரியாகப்பிரயோகம் செய்யும் வழிமுறைகள் முதலியவைகள் பற்றிய ஆலோசனைகளைக் கூறி இலக்குவனை ஆசிர்வதித்து அனுப்புகிறான். இதைப்பற்றிக் கம்பன் மிகச் சிறப்பாகக் குறிப்பிட்டுக் கூறுகிறார். எதிரியான இந்திரசித்தன் எல்லாவிதமான சக்திக் கணைகளையும் கையாளத் தெரிந்தவனாகவும் பயிற்சி பெற்றவனாகவும் இருக்கிறான். அத்துடன் அவன் மாயப்போர் நடத்துவதிலும் வல்லவனாக இருக்கிறான். எனவே அவன் வலுவான சக்திக்கணைகளை ஏவும் போது என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், அவைகளிலிருந்துத் தற்காத்துக் கொள்வது எப்படி அவைகளைத் தடுப்பது எப்படி? என்னும் நுட்பமான விஷயங்களை இலக்குவனுக்கு இராமன் எடுத்துக் கூறுகிறான். “தம்பியைத் தழுவி ஐயன் தாமரைத்தவிசின் மேலான் வெம்படை தொடுக்குமாயின் விலக்கும் அது அன்றி விர அம்புநீ துரப்பாய் அல்லை, அனையது துரந்த Ե5IT6Մ)6ն)