பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும் அரசியலும் 525 தொடர்ந்து இராக்கதர் படையைத் தனது சரங்களால் வெட்டி வானரப்படைகள் இந்திரசித்தனுடைய வேள்வியின் நெருப்பை அழித்தார்கள். நவதான்யக் குவியலைக் குலைத்தார்கள். தருப்பையைச் சிதைத்தார்கள். தொடர்ந்து இந்திர சித்தனைத் தாக்கி மந்திரங்களையே மறக்கச் செய்தார்கள். அம்மந்திரங்களையும் சொல்லவிடாமல் தடுத்தார்கள். இவ்வாறு இராக்கதர்களின் படைகளை அழித்து வேள்வியைச் சிதைத்து வானரப்படை இந்திர சித்தனைச் சூழ்ந்து கொண்டது என்று கம்பன் கூறுகிறார். இந்திரசித்தனுக்குத் தனது வேள்வியை நடித்த முடியவில்லையே என்னும் வருத்தமும் கவலையும் ஏற்பட்டுக் கலக்கமடைந்தான். “மானமும் பாழ்பட, வகுத்த வேள்வியின் மோனமும் பாழ்பட முடிவிலா முரண் சேனையும் பாழ்படச் சிறந்த மந்திரத்து ஏனையும் பாழ்பட இனைய செப்பினான்” மானமும், மோனமும், சேனையும் மந்திரங்களும் பாழ்பட்டுப் போயின. வேள்வியும் அடங்கியது. இனி எனக்கு வெற்றி கிடைப்பதது சந்தேகமே. மனிதர்க்கு ஆற்றாமல் போய்விட்டேன் என்று தனது அகங்கார நிலையிலிருந்துச் சற்று தாழ்ந்து இந்திர சித்தன் பேசியதைக் கம்பர் குறிப்பிடுகிறார். இந்திரசித்தனுடைய பொய்களையும் வஞ்சகத்தையும் இகழ்ந்து மாருதி பேசினான், “நான் உனை இரந்து கூறும் நயமொழி ஒன்றும் கேளாய் சானகி தன்னை வாளால் தடிந்ததோ? தனதன் தந்த மானமேல் சேனையோடும் வடதிசை நோக்கிமீது போனதோ! கோடி கோடி வஞ்சமும் பொய்யும் வல்லாய்!”