பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் - ஒரு சமுதாயப் பார்வை -அ. சீனிவாசன் 526 எத்தனை நல்லுரைகள் சொன்னாலும் கேட்க மறுக்கிறாய். சீதையைக் கொன்றதாகக் காட்சி காட்டியதும், அயோத்தியை நோக்கிப் படையெடுக்கப் போவதாகப் போக்குக் காட்டியதும் எல்லாம் வெட்ட வெளிச்சமாகிவிட்டன. எல்லாம் கோடி கோடி வஞ்சமும் பொய்யும்தான். அதில் நீ கெட்டிக் காரன்தான் என்று இந்திரசித்தனை மாருதி பலவாறாக இகழ்ந்து பேசினான். இந்திரசித்தன் அவைகளையெல்லாம் கேட்டு மேலும் ஆத்திரமும் ஆவேசமும் கோபமும் கொண்டு பதில் பேசி வானரப்படைகளுக்கு எதிராகப் போரைத் தொடுத்தான். இலக்குவன் ஆக, மற்ற இராமனே ஆக ஈண்டு விலக்குவர் எல்லாம் வந்து விலக்குக, குரங்கின் வெள்ளம் குலங்குலமாகமாளும் கொற்றமும் மனிதர் கொள்ளும் அலக்கணும், முனிவர்தாமும் அமரரும் காண்பர் அன்றே!” “யான் உடை வில்லும், என் பொன் தோள் களும் இருக்க இன்னும் ஊன்உடை உயிர்கள் யாவும் உய்யுமோ? ஒளிப்பிலாமல் கூன் உடைக்குரங்கினோடு மனிதரைக் கொன்று சென்று.அவ் வானினும் தொடர்ந்து கொல்வேன் மருந்தினும் உய்யமாட்டீர்” என்றெல்லம் இந்திரசித்தன் கோபாவேசம் கொண்டு பேசிப் பலவகையான சக்தி மிக்கக் கணைகளைச் சரமாரியாகத் தொடுத்தான். இலக்குவன் உறுதியாக நின்று அவன் தொடுத்தக் கணைகள் அனைத்தையும் தடுத்தான். இந்திரசித்தன் மிகவும் சக்தி வாய்ந்தப் பாசுபதக்கணையை ஏவினான். அதை மற்றொரு பாசு பதக்கணை கொண்டு இலக்குவன் தடுத்தான்.