பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும அரசியலும 529 பார். எனக்குச் சிற்றப்பனைக் கொன்ற பழிச்சொல் வந்தாலும் பரவாயில்லை. நீர் உள்ளவரையில்தான் மீன் இருக்கும். அது போல இராவணன் உள்ள வரைதான் அரக்கர்கள் இருப்பார்கள். அதன்பின்னர் நீ ஆட்சிக்கு வந்தாலும் ஊரிலும் உன்னோடும் யார் இருப்பார்? மேலான பிரம்ம குலத்திற்கெல்லாம் நீ இப்போது தனி முதல் தலைவனாகி விட்டாய். (இங்கு கம்பன் பனிமலர் தவிசின் மேலோன் பார்ப்பன குலத்துக்கெல்லம் என்று குறிப்பிடுகிறார். நான்முகன் குலம் (பிரம்மகுலம்) தான் பார்ப்பன குலம் என்று அழைக்கப்படுகிறது. அதன்படி இராவணனுடைய குலம், அதாவது அரக்கர் குலம் பார்ப்பன குலம் என்றாகிறது. ஆனால் சில ஆராய்சியாளர்கள் இராவணன் குலத்தை அரக்கர் குலத்தை திராவிடர் குலம் என்று குறிப்பிடுகின்றனர். அதற்கு இராமாயணக் கதைப்படி ஆதாரம் இல்லை. எப்படியும் இராவணன் பிரம்ம தேவனின் பேரன் என்பதே கதையாகும். இராவணனுடைய உடன்பிறந்த தம்பி வீடணன் என்பதை அறிவோம். எனவே இந்திரசித்தன் பார்ப்பனகுலு, [[]] குறிப்பிடுகிறான்) உனது குலப்பெருமை காரணமாக தேவர்களே உன்னை வணங்குவார்கள். ஆனால் நீயோ அவமானகரமாக மனிதர்களுக்கு அடிமையாக இருந்து கொண்டு இராவணனுடைய செல்வங்களையெல்லாம் அனுபவிக்க நினைக்கிறாய். நீ மானம் கெட்டுப் போனாய். நம்முடைய மானம் மரியாதையெல்லாம் எங்களோடு போய்விட்டது. நீ குலத்தைக் கெடுத்து விட்டாய். இராமனுடைய அம்புகளால் அழகு மிக்க தோள்களையுடைய கம்பீரமான இராவணன் தரையிலே, புழுதியிலே வீழ்ந்து கிடந்தால், அப்போது நீ அவன் மீது விழுந்து அழுவாயோ அல்லது நீயும் பகைவர்களுடன் சேர்ந்து கொண்டு ஆர்ப்பரிப்பாயோ, உன் அண்ணனைக் கொன்ற எதிரிகளை வாழ்த்தி அவர்களை வணங்குவாயோ? என்ன செய்யத் துணிந்தாயப்பா? உடலில் இருந்து உயிர் நீங்கிய பின்னர் மருந்தினால் மீண்டும் உயிர் பெற்று வந்துள்ள அந்த மனிதர்கள் இராவணனைக் கொல்வார்களோ? வெல்வார்களோ? நீயும் அந்த இராவணனுடைய அரசை அடைவதற்குத் தகுதி உள்ளவன் தானா? உன்னை