பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

сыйшейт – «ә(I5 ~Qдаятшй шптіsosu —зу. «Ғбаһипчай 530 வானுலகிற்கு அனுப்புகிறேன் பார். எனக்கு அதனால் பழி வந்து சேரும் என்று நான் கவலைப் படவில்லை என்று இந்திரசித்தன் பேசியதைக் கம்பன் மிக அழகாக மிக நுட்பமாக எடுத்துக் கூறுகிறார். இந்தக் கவிதைகளின் கருத்துக்களில் முக்கியமான சில அரசியல் கொள்கை நிலைகளைக் காண்கிறோம். வீடணன் இலங்கையின் மன்னனாக இராமானால் ஆக்கப் பட்டிருக்கிறான் என்பதை மனதில் வைத்து இந்திர சித்தன் அவனைக் கேவலப்படுத்திப் பதவிக்காக எதிரிகளின் பின்னால் கை கட்டி நிற்கிறான் என இழித்துக் கூறி உன்னை முதலில் ஒழிப்பேன் என்று சினந்து பேசுகிறான். இதை மிகவும் நுட்பமாகக் கம்பன் தனது கவிதைகளில் குறிப்பிடுவகைக் காணலாம் இந்திரசித்தன் பேசிய இந்து சுடு செரற்களையெல்லாம் வீடணன் கேட்டான். அமைதியாகப் பொருமையாக நன்றாகவும் கேட்டான். அந்த வசைகளையெல்லாம் கேட்டுச் சிரித்துக் கொண்டே, 'பாவம் பொல்லாதது. தருமமே சாலச் சிறந்தது. நான் தருமத்திலிருந்து அறத்தின் வழியிலான அரசியலிலிருந்து விலக மாட்டேன்” என்று பதில் கூறுவதைக் காணலாம். “அவ்வுரை அமையக் கேட்ட வீடணன் அலங்கல் மோலி செவ்விதில் துளக்கி, மூரல் முறுவலும் தெரிவது ஆக்கி வெவ்விது பாவம், சாலத் தருமமே விழுமிது ஐயா இவ்வுரை கேட்டி என்னா இணையன விளம்பல் உற்றான்” வீடணன் கூறும் பதில் “நான் அறத்தின் பக்கமே நிற்பேன். மீளாத நரகத்தைக் கொடுக்கவல்ல பாவத்தின் பக்கம் நின்று பாவப் பழியோடு வாழ மாட்டேன். இலங்கை வேந்தனான இராவணன் பிழை செய்து விட்டான். எவ்வளவோ சொல்லியும் அவன் அந்தப் பிழையைத் திருத்திக் கொள்ளவில்லை. அப்போதே நான் அவனுக்கு உடன் பிறந்தவன் இல்லை என்று விலகிக் கொண்டு விட்டேன். நான் உண்மையின் பக்கமே நிற்பேனேயல்லாமல் பொய்மையாகிய உங்கள் பக்கம் நிற்க மாட்டேன்” என்று இந்திரசித்தனுக்குப் பதிலளிக்கிறான். "அறம் துணையாவது அல்லால் அருநரகு அமைய நல்கும்