பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும் அரசியலும் 477 இருக்கிறது. அவன் தனது நிலையில் வெற்றி பெறவில்லை. ஆயினும் அவன் வரலாற்றில் தனி இடம் பெற்று விட்டான். மேலும் கும்பகருணன் தொடர்ந்து பேசுகிறான். நான் கூறும் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியுமானால் ஏற்றுக்கொள். அதில் ஒரு மாற்றத்தை நீ எதிர் பார்த்தால் அதில் பலன் இல்லை. நடக்கவும் நடக்காது. நீ போய் அவர்களுடன் சேர்ந்து கொண்டு நன்றாக இருப்பாயாக." “தாழ்கிற்பாய் அல்லை, என்சொல் தலைக் கொளத் தக்கது என்று கேட்கிற்பாய் ஆயின் எய்தி அவரோடும் கேழிய நட்பை வேட்கிற்பாய் இனி ஒர் மாற்றம் விளம்பி னால் விளைவு உண்டு என்று சூழ்கிற்பாய் அல்லை யாரும் தொழநிற்பாய் என்னச் சொன்னான் ” இன்னும், நீ பிழைத்திருப்பாயாக, இராமனை வேண்டி நின்று, நாங்கள் எல்லாம் மடிந்த பின்னர், வேத நூல்களின் படி எங்களுக்கு இறுதிக் கடன்களை ஆற்றி நாங்கள் நரகத்தை அடையாமல் காப்பாயாக என்றும் கூறுகிறான். “போதி நீ ஐய, பின்னைப் பொன்றினார்க்கு எல்லாம் நின்ற வேதியர் தேவன் தன்னை வேண்டினர் பெற்று மெய்ம்மை ஆதிநூல் மரபினானே கடன்களும் ஆற்றி ஏற்றி மாதுயர் நரகம் நண்ணா வண்ணமும் காத்தி மன்னோ! ” என்று கூறி, முடிவாக,