பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் - ஒரு சமுதாயப் பார்வை -அ. சீனிவாசன் 532 துன்புறுத்தாதே என்று நான் கூறிய போது உன் தந்தை என்னை வெளியே போ என்று விரட்டி விட்டான். நான் உங்களை விட்டு வெளியேறி விட்டேன். அந்த நரகத்தில் என்னால் இருக்க முடியவில்லை. “வெம்மையில் தருமம் நோக்கா வேட்டதே வேட்டு வீயும் உம்மையே புகழும் பூண்க துறக்கமும் உமக்கே ஆக, செம்யிைல் பொருந்தி மேலோர் ஒழுக்கி னோடு அறத்தைத் தேறும் எம்மையே பழியும் பூண்க நரகமே எமக்கே ஆக !יי கொடுமை மிக்க மனத்தனாக இருந்து கொண்டு, எத்தகைய தர்மத்தையும் பார்க்காமல் மனம் போன போக்கில் நடந்து கொண்டு திரியும் உங்களுக்கே புகழ் கிடைக்கட்டும். எல்லாப் பெருமையும் உங்களுக்கே கிடைக்கட்டும். நல்ல குணத்தோடு இருந்து செம்மையாக நடந்து மேலான ஒழுக்கத்தோடு நடந்த அறத்தோடு நிற்கும் எமக்கே எல்லாப் பழியும் சேரட்டும், நரகமும் கிடைக்கட்டும் என்றும் வீடணன் எடுத்துக் கூறி விட்டு, “அறத்தினைப் பாவம் வெல்லாது என்னும் அது அறிந்து ஞானத் திறத்தினும் உறும் என்று எண்ணித் தேவர்க் கும் தேவை சேர்ந்தேன் புறத்தினில் புகழே ஆக பழியொடும் புணர்க! போகச் சிறப்பினிப் பெருக! தீர்க! என்றனன் சீற்றம் இல்லான்” வீடணன் எந்தவிதமான சீற்றமும் பதட்டமும் இல்லாமல் அமைதியான முறையில் அறத்தினைப் பாவம் வெல்லாது என்னும் உண்மையை அறிந்தும் அறிவுக்கும் அதுவே பொருந்தும் என்று புரிந்தும் இராமன் பக்கம் சேர்ந்துள்ளேன். அது புகழைக் கொடுத்தாலும் சரி, பழி ஏற்பட்டாலும் சரி, அதைப் பற்றிய கவலை எனக்கில்லை. உங்களுக்கே எல்லாச் சிறப்பும் இருக்கட்டும்,