பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும் அரசியலும் 535 இந்திரசித்தன் இந்த இரு வெற்றிகளையும் விரப்போர் மூலமாக மட்டுமல்லாது மாயப் போர் மூலமும் சாகசங்களின் மூலமும் வெற்றி தேடினான் என்றாலும் போர்க்களத்தில் வெற்றி பெற்றான் என்பது அவனுடைய சாதனையேயாகும். மூன்றாம் முறையாக இந்திரசித்தன் நிகும்பலை யாகம் செய்து யாராலும் வெல்ல முடியாத தனி பலத்தைப் பெற்றுப் போரிட முயன்றான். ஆனால் அந்த யாகத்தை அவனால் செய்ய முடியாமல் அவனை இலக்குவனும் மாருதியும் வானரப்படையும் வீடணனுடைய உதவியைக் கொண்டு தடுத்து விட்டனர். எனவே இந்திரசித்தன் புதிய பலம் பெற முடியவில்லை. இந்த மூன்று கட்டங்களிலும் இந்திரசித்தனுடைய வீரம், மாயம், போர்த்திறன், போர்த் தந்திரம், ஆயுதப் பிரயோகம் முதலியவற்றை முறியடிப்பதற்கு இராம இலக்குவர்களுக்கும், வானரப்படைகளுக்கும் வீடணன் பெரிய அளவில் உதவியாக இருந்துள்ளான். இராமனுடைய வெற்றிக்கு வீடணன் மிக முக்கியமான காரணமாகவும், கருவியாகவும் இருந்திருக்கிறான் என்பது இராமாயணக் கதையில் மிகுந்த அரசியல் முக்கியத்வம் நிறைந்ததாக இருந்திருக்கிறது என்பதைக் காண்கிறோம். சென்ற காரியத்தை முடிக்காமல் சோர்வுடன் வந்துள்ள காரணத்தை இராவணன் கேட்ட போது இந்திரசித்தன் சில உண்மைகளைத் தனது தந்தையிடம் கூறுகிறான். ‘சூழ் வினை மாய மெல்லாம் உம்பியே துடைக்கச் சுற்றி வேள்வியைச் சிதைய நூறி வெகுளியால் எழுந்து வீங்கி ஆள்வினை ஆற்றல் தன்னால் அமர்த் தொ ழில் தொடங்கி ஆர்க்கும் தாழ் விலாப்பபடைகள் மூன்றும் தொடுத்த னென் தடுத்து விட்டான்.” "நிலம் செய்து விசும்பும் செய்து நெடிய மால் படை நின்றானை,