பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன்_ஒரு_சமுதாயப் பார்வை-அ-சீனிவாசன் 536 வலம் செய்து போவதனால் மற்றினி வலிய துண்டோ? குலம் செய்த பாவத்தாலே கொடும் பழி தேடிக் கொண்டாய் சலம் செயின் உலகம் மூன்றும் இலக்குவன் முடிப்பன் தானே.” “முட்டிய செருவில் முன்னம் முதல்வன் படையை என்மேல் விட்டிலன் உலகை அஞ்சி ஆதலால் வென்று மீண்டேன் கிட்டிய போதும் காத்தான் இன்னமும் கிளர வல்லான் சுட்டிய வலியினாலே கோறலைத் துணிந்து நின்றான்.” நாம் செய்த மாய் மாலங்களையெல்லாம், வஞ்சகக் காரியங்களையெல்லாம், போர்த் தந்திரங்களையெல்லாம் உனது தம்பியாகிய வீடணன் துடைத்தெரிந்து விட்டான். வேள்வியையும் சிதைத்து விட்டான். நானும் தாழ் விலாப்படைகள் மூன்றையும் (நான்முகப்படை, திருமால் படை, பாசுபதப்படை) தொடுத்துப் பார்த்தேன். அவைகள் அனைத்தையும் இலக்குவன் தடுத்து விட்டான். திருமால் படை அவனைச் சுற்றி வலம் வந்து திரும்பி விட்டது. அதைக் காட்டிலும் வலுவான வேறுபடை நம்மிடம் இல்லை. நாம் நமது குலம் செய்த பாவத்தால் கொடும் பழியைத் தேடிக் கொண்டோம். இலக்குவன் மட்டுமே மூன்று உலகங்களையும் வெல்லும் வல்லமையைப் பெற்றிருக்கிறான். முன்பு உலகிற்கு அழிவு ஏற்பட்டு விடுமோ எனக் கருதி அவன் நான்முகன் படையை ஏவாமல் விட்டான். அதனால் தான் நான் முன்பு வெற்றியடைந்து திரும்ப முடிந்தது. இன்னும் வலுவுடன் போரிடுவதற்கு அவன் வல்லமை பெற்றிருக்கிறான் என்று கூறி ஆதலால், “அஞ்சினேன் என்று அருளலை, ஆசைதான் அச் சீதை பால் விடுவையாயின் அனையவர் சீற்றம் தீர்வர்,