பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*LITI NoТІ — 9)პQU) 3(Զ2ԱԱւ பாாவை -அ. சனவாசன ጏ.. உன்னை நீ அவரை வென்று தருதி என்று உணர்தும் அல்லால் என்னையே நோக்கி யான் இந்நெடும் பகை தேடிக் கொண்டேன்” இதற்கு முன்னர் போரிட்டு இறந்தவர்களெல்லாம் இப்பகை முடிப்பர் என்று நான் எதிர் பார்த்து நின்றதில்லை. அடுத்து இனி போர் செய்பவர்கள் வெற்றி பெற்று எனது ஆசையை நிறைவேற்றி விடுவார்கள் என்று நான் எதிர் பார்க்கவுமில்லை. நீ அவர்களை வென்று தருவாயாக என்று நான் உன்னைக் கேட்கவுமில்லை. என்னையும் எனது வலிமையையும் மட்டுமே ஆதாரப்பட்டு இந்த நெடும் பகையைத் தேடிக் கொண்டேன் என்று இராவணன் கூறியதைக் கம்பன் மிக அற்புதமாகத் தனது கவிதையில் குறிப்பிட்டுக் கூறியுள்ளார். மேலும் இராவணன் கூறுகிறான். “பேதமை உரைத்தாய் பிள்ளாய் உலகெலாம் பெயரப் பேராக் காதை என் புகழி னோடும் நிலை பெற அமரர் காண மீதெழு மொக்குள் அன்ன யாக்கையை விடு வது அல்லால் சீதையை விடுவது உண்டோ? இருபது திண் தோள் உண்டால்” "நீ சிறு பிள்ளைத் தனமாகப் பேசி விட்டாய். என்னுடைய கதை உலகப் புகழ் பெறும். என்னுடைய புகழோடு இணைந்து அது நிலைபெறும். என் உயிரினையேனும் விடுவேனேயல்லாது எனது இருபது தோள்கள் இருக்கும் வரை சீதையை விட மாட்டேன்” என்றான் மேலும் கூறுகிறான், “வென்றிலேன் என்ற போதும் வேதம் உள்ள ளவும் யானும் நின்றுளேன் அன்றோ மற்ற இராமன் பேர் நிற்கு மாயின் பொன்றுதல் ஒரு காலத்துத் தவிருமோ? பொதுமைத் தன்றோ?