பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கம்பனும் அரசியலும் Հ4 | வீடணன் எடுத்துக் கூறிய, சொல்லிக் காட்டியுள்ள விவர -ங்களை வைத்து இந்திரசித்தனுடைய போர்த் தந்திரங்களின் இரகசியங்களை அறிந்து கொண்டு அவனை இலக்குவன் வெற்றிகரமாகச் சமாளித்துப் போரில் வெற்றி கண்டான். இந்திரசித்தன் போர்க்களத்தில் இலக்குவனுடைய கணைகளுக்குப் பலியானான். இலக்குவன் இந்திரசித்தன் மீது இராமன் பெயரிலான பிறைக் கணையை ஏவினான். அந்த வல்லமை மிக்கப் பிறைக் கணைச் சிவனுடைய வேல் படையையும் நான்முகன் படையினையும் நான வைத்து இந்திரசித்தனுடைய சிரத்தைத் தள்ளியது என்று கம்பன் குறிப்பிடுகிறார். “மறைகளே தேறத் தக்க வேதியர் வணங்கற் Լյո6մ, இறையவன் இராமன் என்னும் நல்லற மூர்த்தி என்னின், பிறை எயிற்று இவனைக் கோறி என்று ஒரு பிறைவாய் வாளி நிறை உறவாங்கி விட்டான் உலகெலாம் நிறுத்தி நின்றான்.” "நேமியும் குலிச வேலும் நெற்றியின் நெருப்புக் Ց5 6ՃԾT 5մԾTTT ՃԱT நாமவேல் தானும் மற்றை நான்முகன் படை யும் நாணத் தீமுகம் கதவ ஒடிச் சென்று அவன் சிரத்தைத் தள்ளிப் பூமழை வானோர் சிந்தப் பொலிந்தது அப் பகழிப் புத்தேன்.” இந்திரசித்தன் மரணத்தையொட்டி இலங்கையின் அரசியலில் இராம இராவணப் போரில் அப்போரின் தந்திரங்களில் உபாயங்களில் ஒரு முக்கியமான கட்டம் முடிவுற்றது எனக் கூறலாம். தனது மகன் மாண்ட செய்தி கேட்டு இராவணன் மிகுந்த சோகமடைந்தான்.