பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன்-ஒரு சமுதாயப் பார்வை-அ. சீனிவாசன் Է4 “மைந்தவோ எனும் மாமகனே எனும் எந்தையோ எனும் என் உயிரே எனும் முந்தினேன் உனை நான் உளனே எனும் வெந்த புண்ணிடை வேல் பட்ட வெம்மையான்” என்று இராவணன் புலம்புகிறான். போர்க்களத்திற்குச் சென்று தன் மகனின் உடலை எடுத்துக் கொண்டு இலங்கை நகருக்குள் வந் H உனது வல்லமையால் நினைத்ததை முடித்து வெற்றி ற்ற் நான் இப்போது நீ எனக்குச் செய்ய வேண்டிய o: உனக்குச் செய்ய வேண்டிய தாயிற்றே என்று புலம்புகிறான். “சினத்தோடும் கொற்றம் முற்ற இந்திரன் செல் வம் மேவ நினைத்தது முடித்து நின்றேன் நேர் இழை ஒருத்தி நீரால் எனக்கு நீ செயத் தக்க கடன் எல்லாம் எங்கி ஏங்கி உனக்கு நான் செய்வது ஆனேன் என்னின் யார் உலகத்து உள்ளார்” என்பது கம்பன் கவிதையாகும். இந்திரசித்தனின் உடல் மீது விழுந்து மண்டோதரி புலம்புகிறாள். சீதை தானே இத்தனைக்கும் காரணம் என்று இராவணனுக்குக் கடுங்கோபம் ஏற்படுகிறது. சீதையைக் கொல்வேன் என்று வாளை உறுவிக் கொண்டு ஒடுகிறான். அப்போது முதலமைச்சன் மகோதரன் அவனைத் தடுத்து "உனது புகழுக்கு இது நல்லதன்று ” என்று எடுத்துக் கூறி இராவணனைத் தடுத்து நிறுத்தினான். இங்கு மகோதரன் சில முக்கிய அரசியல் நெறிகளையும் பொது நெறிகளையும் எடுத்துக் கூறுவதைக் கம்பன் மிகவும் நுட்பமாகக் குறிப்பிடுகிறார். “நீர் உள தனையும் சூழ்ந்த நெருப்புள தனை யும் நீண்ட