பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. slauggy* அரசியலும் 543 யார் உள தனையும் வானப்பரப்புள் தனை யும் காலின், போர் உள தனையும் பேராப்பெரும் பழி பிடி த்து போலாம் போர் உள தனையும் வென்று புகழ் உள தனையும் உள்ளாய்” நீரும் நிலனும் நெருப்பும் காற்றும் வானமும் உள்ளளவும் உனக்குத் தீராத பழி உண்டாகி விடும் படியான ஒரு காரியத்தை நீ செய்தல் கூடாது. “மங்கையைக் குலத்துளாளைத் தவத்தியை முனிந்து வாளால் சங்கை ஒன்று இன்றிக் கொன்றால் குலத் துக்கேதக்கான் என்று கங்கை அம் சென்னியானும் கண்ணனும் கமலத் தோனும் செங்கையும் கொட்டி உன்னைச் சிரிப்பால் சிறியன் என்னா” தவத்தில் அமர்ந்திருக்கும் மங்கையை எந்தவிதமான சங்கையும் இன்றி நீ கொல்வாயானால் சிவனும், திருமாலும் நான்முகனும் கூட நீ அற்பமானவன் என்று கைகொட்டிச் சிரிப்பார்கள் என்றும், “நிலத்தின் இயல்பு அன்று வான்நெறி அன்று நீதி அன்று தலத்து இயல்பு அன்று மேலோர் தரும மேல் அதுவும் அன்று புலத்தியன் மரபின் வந்து புண்ணிய மரபு பூண்டாய், வலத் தியல்பு அன்று மாயப் பழி கொடு மருகு வாயோ?” உலகியல்பு, வான் உலக நெறி, நீதிநெறி தனது நாட்டு நெறி, மேலோர் தரும நெறி முதலிய அனைத்திற்கும் எதிரான ஒரு செயலை