பக்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை-2.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

•ышuso – сәФ «Qрғылшй иптіsosu —зу. «Foofkитчейі 546 பற்றிக் கவலைப் படாமல் இலங்கையின் தனியாண்மையை கெளரவத்தை நிலை நிறுவத்துவதே அவனுடைய சிந்தனைப் போக்காக இருந்து வந்திருக்கிறது. அந்த வழியில் இராவணனுடைய சிந்தனைச் சிதரலையும் கூடத் தடுத்து இலங்கைப் போரைத் தொடர்ச்சியாகக் கொண்டு செல்வதற்கு மகேந்திரனுடைய முயற்சி இருந்து வந்திருக்கிறது. மூலபலப் படை இலங்கையின் அரசியலில் அதனுடைய கோட்டை கொத்தளம், படைபலம், ஆகியவற்றில் அதன் தற்காப்பு மற்றும் தாக்குதல் சக்தியின் மிகவும் முக்கியமான அங்கமாக இருப்பது அதனுடைய மூல பலப்படைப் பிரிவாகும். இதர படை பலங்கள் எல்லாம் குறையும் போது அல்லது போதாதபோது கடைசியாகப் போர்க் களத்திற்கு வருவது மூலபலப்படையாகும். அது மிகவும் வல்லமை மிக்கதும் தனிப் பயிற்சிகள் பெற்றதும் பயங்கரமானதுமாகும். அது சிறப்பான பல பயிற்சிகளையும் பெற்றுள்ள சிறப்புப் படையாகும். பல பயங்கரமான சக்திமிக்க ஆயுதங்களைக் கொண்டதாகும். இந்த மூலபலப்படையைப் பற்றிக் கம்பன் மிகவும் சிறப்பாக விளக்கிக் கூறுகிறார். இராவணன் தனது மூலபலப்படையைத் திரட்டுகிறான். மூலபலப் படைத் தளபதிகளும், வன்னி என்னும் மூலபலப்படையின் தலைமைத் தளபதியும், முதுமகன் மாலியவானும் மற்றும் சில பிரதானிகளும் கூடி, ஆலோசனை செய்கின்றனர். இது அநேகமாகக் கடைசி கட்ட ஆலோசனையாக இருக்கிறது. மாலியவான், வன்னியிடம் இதுவரை நடந்த விவரங்களைக் கூறுகிறான். கும்பகருணனும், அதிகாயனும், இந்திரசித்தனும் மற்ற வீரர்களும் மடிந்ததும், வானரப்படை போரில் வீழ்ந்தும் மீண்டும் மருத்துவ மலையால் உயிர் பெற்று எழுந்ததும் விதியால் விளைந்தது என்று கூறுகிறான். இந்த விதியின் விளைவு இயிகையில் ஏற்பட்டதல்ல. சீதையென்னும் கற்புடைப் பத்தினி பெர்ருட்டால் ஏற்பட்டிருக்கிறது. அது தவிர்க்கப் பட்டிருந்தால் இத்தனை சேதங்கள் ஏற்பட்டிருக்காது என்று மாலியவான் கூறுகிறான். இந்தக் கருத்துக்களைக் கேட்ட பின்னர் இராவணன் மீண்டும் கூறுகிறான் முதுமகன் கூறியபடி சீதையை விட்டு விடுவதானால்